background img

புதிய வரவு

ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவன் முல்லா ஒமர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவன். தலிபான் இயக்கத்தின் மதப் பிரிவு தலைவராகவும் இவன் செயல்பட்டு வந்தான். தலிபான் அமைப்பினரை அமெரிக்கப் படைகள் ஒடுக்கிய பின்னர் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலுமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் பிடித்து ஆட்சியமைத்த போது அதன் தலைவராக செயல்பட்டு வந்தான் முல்லா ஒமர். இந்த அரசை பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மட்டும் அங்கீகரித்திருந்தன.

2001ல் நடந்த நியூயார்க் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனுக்கும் பிற அல் கொய்தா தலைவர்களுக்கும் முல்லா ஒமர்தான் அடைக்கலம் கொடுத்து காத்து வந்தான். இதனால் முல்லா ஒமரையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன.

சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்ற நிலையில் தற்போது முல்லா ஒமரும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லா ஒமரை பாகிஸ்தான் படையினர்தான் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ டிவி வெளியிட்ட செய்தியில், குவெட்டாவிலிருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு முல்லா ஒமர் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒமர் கொல்லப்பட்டான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குல் மற்றும் ஒமர் பலியானதை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இருப்பினும் முல்லா ஒமர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் அரசோ அல்லது அமெரிக்காவோ இதுவரை உறுதி செய்யவில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts