background img

புதிய வரவு

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி கொச்சியை வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சென்னை அணி 11 ரன் வித்தியாசத்தில் கொச்சி அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சஹா 46 ரன்கள் (33 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். அடுத்து களம் இறங்கிய கொச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொச்சி அணியில் அதிகபட்சமாக ஹாட்ஜ் 51 ரன்கள் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மெக்குல்லம் 33 ரன்கள் (37 பந்து, 3 பவுண்டரி), ஜடேஜா 19 ரன்கள் (13 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 51 ரன்கள் எடுக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts