தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதியவர்கள் ஆவர். 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்களும் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.
சென்னையில் 232 பள்ளிகளைச் சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத்தம் பணி முடிந்து பாட வாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்தது.அனைத்து பணிகளும் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக உள்ளது.
இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நாளை மறுநாள் (27-ந்தேதி) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகியவற்றை 27.5.2011 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட ஆணையிட்டுள்ளார்.
இந்தத் தேர்வுகளின் முடிவுகள் 27.5.2011 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவ- மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணைய தளங்கள் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment