background img

புதிய வரவு

தனிவார்டுக்கு ரஜினி மாற்றம்!

தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும் தொடர் சிகிச்சை காரணமாக, நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இதனால் அவர் நேற்றிரவு தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவரே உணவை எடுத்துக் கொண்டார். மனைவி மற்றும் மகள்களுடன், "டிவி பார்த்தார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம் தேதி, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினி காந்திற்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக செயல்பாடு திடீரென மந்தமான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், ரஜினிக்கு அல்ட்ரா பில்ட்ரேஷன் ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ரத்தத்தில் அதிகரித்திருந்த, "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இந்த சிகிச்சையைத் தொடர்ந்து, ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், நேற்று தன் மனைவி, மகள்களுடன், "டிவி பார்த்தார். வழக்கமான உணவே அவருக்கு கொடுக்கப்பட்டது.

இது குறித்து, ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 18ம் தேதி முதல், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். இருப்பினும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்படுவார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நேற்று அவரே உணவை எடுத்துக் கொண்டார். மனைவி மற்றும் மகள்களுடன், "டிவி பார்த்தார். ரஜினியின் உடல்நிலை சீரான பிறகே, அவர் தனி வார்டுக்கு மாற்றப்படுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிவார்டுக்கு மாற்றம்: தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரஜினிக்கு மருத்துவக் குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல்வேறு நவீன பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் சிகிச்சையின் காரணமாக, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு 7 மணியளவில், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி வார்டுக்கு ரஜினி மாற்றப்பட்டார். இருப்பினும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, இன்னும் சில நாட்களுக்கு அவர், பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts