சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் ரஜினி காந்த் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திட உணவை அவரே எடுத்துச் சாப்பிடுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக நடிகர் ரஜினி காந்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
மே 13-ம் தேதி இரவு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறையில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில்... ரஜினிக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சுவாசத்தை சீராக்க தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
டயாலிஸிஸ்... அங்கு நுரையீரலில் சேர்ந்துள்ள நீரை அகற்ற நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்தத்தைச் சுத்திகரிக்க, ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தத்தில் அதிகரித்துவிட்ட தாது உப்புக்கள், "அல்ட்ரா ஃபில்ட்ரேஷன்' எனப்படும் மருத்துவ சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
இத்தகைய சிகிச்சைகளால் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவர் தனது குடும்பத்தாரிடம் தனது நேரத்தைக் செலவழித்துக் கொண்டிருக்கிறார் எனவும், திட ஆகாரத்தை எந்தவித உதவியும் இன்றி அவரே சாப்பிடுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீடிக்கும் தீவிர சிகிச்சை...நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், பார்வையாளர்களை தவிர்க்கவும் ரஜினிகாந்த் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
நலம் விசாரிப்பு: மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை லதா ரஜினி காந்தை தொலைபேசியில் அழைத்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மருத்துவமனைக்குச் சென்று ரஜினி காந்தின் உதவியாளர் சுப்பையாவிடம் நலம் விசாரித்து, விரைவில் குணம் பெற வாழ்த்து தெரிவித்தார்

0 comments :
Post a Comment