background img

புதிய வரவு

இந்தியா கொடுத்த 50 பேர் கொண்ட தேடப்படுவோர் பட்டியலை நிராகரித்தது பாக்.

இஸ்லாமாபாத் தப்பும் தவறுமாக இந்தியா கொடுத்திருந்த 50 பேர் கொண்ட அதிகம் தேடப்படுவோர் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.

சமீபத்தில் இந்தியாவால் அதிகம் தேடப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்திருந்தது இந்தியா. ஆனால் இதில் இரண்டு பேர் இந்தியாவிலேயே இருப்பது பின்னர் தெரிய வந்து இந்தியாவுக்கு பெரும் அசிங்கிமாகி விட்டது.

அதில் ஒரு நபர் சிறையி்ல் இருப்பதும், இன்னொரு நபர் ஜாமீனில் வெளியில் இருப்பதும், தானேவில் வசித்து வரும் தெரிய வந்தது.

சிபிஐக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் இது பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து புதிய திருத்தப் பட்டியலை விரைவில் அளிப்போம் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இந்தநிலையில் இந்தியா கொடுத்திருந்த முதல் பட்டியலை தற்போது பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்பதை முதலில் விசாரித்துப் பார்க்குமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அட்வைஸ் கூறி மேலும் நம்மை அசிங்கப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்களா என்பதை நீங்கள் முதலில் விசாரித்துப் பாருங்கள். நீங்கள் கொடுத்த பட்டியலில் இருந்த 2 பேர் இந்தியாவிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மற்ற 48 பேரும் கூட இந்தியாவிலேயே இருக்கலாம். எனவே அதுகுறித்து முதலில் தெளிவாக விசாரணை நடத்தி விட்டுப் பின்னர் எங்களிடம் வாருங்கள் என்று தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

இந்தியா கொடுத்திருந்த பட்டியலில் தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பிறமுக்கியத் தீவிரவாத தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts