background img

புதிய வரவு

இறால் வடை

தேவையான பொருள்கள் :

இறால் - 10
உடைத்த கடலை - ஓரு ஆழாக்கு
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 200 கிராம்
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 1 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் - 400 கிராம்
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - - தேவையான அளவு

செய்முறை :

இறாலை உரித்துக் கழுவிச் சுத்தம் செய்து அதில் பாதி அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை தண்ணீரில் வேக வைக்கவும்.

வேக வைத்த இறாலை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.

இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா ஆகியவற்றை அதில் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.

வதக்கிய வெங்காயம், அரைத்து வைத்துள்ள இறால், உடைத்த கடலை, மீதமுள்ள உப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகப் பிசையவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.

இறால் வடை தயார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts