background img

புதிய வரவு

பள்ளியின் ஆன்லைன் மூலமே வேலைவாய்ப்பு பதிவு : ஜெ. உத்தரவு

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’+2 தேர்ச்சி பெற்றவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு தகுதி உடனடியாக கிடைக்க வெண்டும் என்பதால் மதிப்பெண் பட்டியல் பெற்ற உடனேயே வேலை வாய்ப்பு அலுவலகங்களை +2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் நாடுகின்றனர்.

அவ்வாறு தேர்ச்சி பெற்ற அனைவரும் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கால விரயம், போக்குவரத்து செலவு ஏற்பட்டு மாணவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

இனி மதிப்பெண் பட்டியல் பெறும் நாளிலேயே மாணவ, மாணவியர் பயிலுகின்ற பள்ளியிலேயே வேலை வாய்ப்பு வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளேன்.

மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளான 25.5.2011 அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து வேலை வாய்ப்பு பதிவு அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts