
இந்த நிலையில், கோஹ்லி & போமர்ஸ்பாக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 48 ரன் சேர்த்தது. போமர்ஸ்பாக் 29 ரன் எடுத்து போலிஞ்சர் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. கோஹ்லி 70 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), திவாரி 9 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வென்றது. ரெய்னா ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாசினார். பத்ரிநாத் 34, டோனி 29, மார்க்கெல் 28 ரன் எடுத்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
0 comments :
Post a Comment