ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் புகழ்பெற்ற வாயு லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராஜகோபுரம் கடந்த ஆண்டு மே 26-ந் தேதி இரவு 7.55 மணிக்கு இடிந்து விழுந்தது.
இக்கோபுரத்தை 1516-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண தேவராயர் கட்டினார். சரித்திர புகழ் பெற்ற இந்த கட்டிடம் இடிந்ததால் காளகஸ்தி கோவில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் ஆந்திர அரசுக்கு ராஜகோபு ரத்தை உடனடியாக கட் டும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆந்திர அரசு புதிய ராஜகோபுரம் கட்ட ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இதுவரை கட்டிட பணி தொடங்கப்படவில்லை.
இதனால் காளகஸ்தி கோவில் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் கூறும் போது, “ராஜகோபுரம் இடிந்து ஓராண்டு ஆகி விட்டது. ஆனால் இதுவரை கோபுரம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. ராஜகோபுரத்தை ஆந்திர அரசு விரைவாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கோபுரம் கட்டக்கோரி போராட்டம் நடத்துவோம்” என்றனர்.
கோபுரம் இடிந்து ஓராண்டு நிறைவு அடைந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரம் இருந்த இடத்தில் பூஜை நடத்தி வழிபட்டனர்.

0 comments :
Post a Comment