AIADMK
·
Feature
·
INDIA
·
NR Congress
·
Pondicherry NR congress to give 2 ministers seat to AIADMK
·
Rengaswamy
புதுச்சேரி: அதிமுகவுக்கு 2 அமைச்சர்கள் பதவி தர ரங்கசாமி தயார்?
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி தனது அமைச்சரவையை வரும் 27ம் தேதி விரிவாக்க உள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சியைப் பிடித்தார். 15 இடங்களில் அவரது கட்சியும் 5 இடங்களில் அதிமுகவும் வென்றன.
ஆனால், மெஜாரிட்டிக்கு 1 எம்எல்ஏ மட்டும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் காரைக்கால் நிரவி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற சிவக்குமாரை சேர்த்துக் கொண்டு ஆட்சியமைத்தார் ரங்கசாமி. இதையடுத்து ரங்கசாமிக்கு டோஸ் விட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ரங்கசாமி துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார்.
இந் நிலையில் தனது அமைச்சரவையை வரும் 27ம் தேதி விரிவாக்கம் செய்யவுள்ளார் ரங்கசாமி. இந்த மாநிலத்தில் முதல்வரை சேர்த்து 6 அமைச்சர்களை நியமிக்கலாம் என்ற நிலையில் 27ம் தேதி 3 பேரை மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்க வைப்பார் ரங்சாமி என்கிறார்கள்.
இதில் சந்திரகாசு, ராஜவேலு, சபாபதி ஆகியோர் அமைச்சர் பதவி பெறுவார்கள் என்று தெரிகிறது.
இதைத் தவிர, மீதியுள்ள 2 அமைச்சர் பதவிகளுக்கு ரங்கசாமி உடனே யாரையும் நியமிக்கமாட்டார் என்று தெரிகிறது. ஜெயலலிதாவைச் சந்திக்க ரங்கசாமி முயன்று வருவதாகக் கூறப்படும் நிலையில் அவர் கோரினால் 2 பதவிகளை அதிமுகவுக்கு ரங்கசாமி விட்டுத் தரக் கூடும் என்கிறார்கள்.
ரங்கசாமிக்கு ஆதரவு அளித்து வரும் சுயேச்சை எம்எல்ஏ சிவக்குமார் சபாநாயகராக்கப்படலாம் என்று தெரிகிறது.
1 தொகுதியில் ரங்கசாமி ராஜினாமா:
இந் நிலையில் ரங்கசாமி தான் வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் ஒன்றான இந்திரா நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் தங்களது வெற்றி அறிவிக்கப்பட்ட 14 தினங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை எனில் வெற்றிபெற்ற இரண்டு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.
இதையடுத்து ரங்கசாமி தனது இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக இந்திரா நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
0 comments :
Post a Comment