புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் அரசியலில் தீவிரமாக இறங்குவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுடன் பணியாற்றியவர் முன்னாள் அமைச்சர் வசந்த் சாத்தே. இவர் சமீபத்தில் குறிப்பிடுகையில், "இந்திராவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. குறிப்பாக, ராகுலை விட பிரியங்காவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ளது. ஆனால், பிரியங்கா அரசியலில் ஈடுபட முன்வரவில்லை. அவரது சகோதரன் ராகுல் தான் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார்' என்றார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி குறிப்பிடுகையில், "பிரியங்கா அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். ராகுலின் செல்வாக்கால் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் தடைபடுவதாகக் கூறுவது தவறு' என்றார்.

0 comments :
Post a Comment