எல் ரெனோ : அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள், நேற்று வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இச்சூறாவளிக்கு நேற்று மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை, 200ஐ தாண்டி விட்டது.
அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் கடந்த 22ம் தேதி, மணிக்கு 320 கி.மீ., வேகத்தில், "டொர்னடோ' என்றழைக்கப்படும் பயங்கர சூறாவளி வீசியது. இதில், 122 பேர் பலியாயினர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலையில், ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது.
இதில், ஐந்து பேர் பலியாயினர். எல் ரெனோ நகரில், "டொர்னடோ' தாக்கியதில், ஒரு காஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. எல் ரெனோ நகரில் பதிவான குறிப்புகளின்படி, நேற்றைய, "டொர்னடோ' மணிக்கு 243 கி.மீ., வேகத்தில் வீசியுள்ளது. ஒக்லஹாமா நகரின் கனடியன் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன.
அதேபோல், கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்களையும் நேற்று, "டொர்னடோ' தாக்கியது. இதில், அர்கன்சாஸ் மாகாணத்தில் பிராங்க்ளின் மற்றும் ஜான்சன் பகுதிகளில் இருவர் பலியாயினர். கன்சாஸ் மாகாணத்தில் இருவர் பலியாயினர். இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், ஏற்கனவே, "டொர்னடோ'வால் பாதிக்கப்பட்ட மிசவுரி மாகாணத்தின் ஜாப்ளின் நகர மக்கள், மேலும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
"டொர்னடோ' பயணித்த பகுதிகளில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் கார்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை இழந்தவர்கள், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால், மேலும் பல தாக்குதல்களை நிகழ்த்துமோ என்ற பீதியைக் கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் 29ம் தேதி நேரில் பார்வையிடுவார் என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

0 comments :
Post a Comment