background img

புதிய வரவு

மூளை செயல்பாட்டை பாதிக்கும் சோர்வு: சுவாரஸ்ய ஆய்வு

சோர்வு அதிகமாகின்ற போது மனிதன் தன்னை அறியாமலேயே தவறுகளைச் செய்கின்றான்.
மூளையின் பெரும் பகுதி விழித்துள்ள நிலையிலும் ஒரு சிறு பகுதி கண் இமைக்கும் நேரம் சோர்வடைதால், ஞாபகத்தோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அமெரிக்காவின் விஸ்கொன்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளின் மூளைச் செயற்பாட்டை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பகல் நேரத்தில் எலிகளை விழித்திருக்கச் செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக பகல்பொழுதில் எலிகள் தூங்குவது தான் வழக்கம்.

இந்த வேளையில் எலிகளின் மூளையில் பெரும்பகுதி சுறுசுறுப்பாக இருந்தாலும், அது விழித்துள்ள நிலையிலும் கூட ஒரு சிறு பகுதி உறக்கம் கொள்கின்றது.

இவ்வாறு அவற்றை நீண்ட நேரம் விழித்திருக்கச் செய்கின்ற போது மூளையின் அநேக கலங்கள் ஓய்வெடுக்கின்றன. இதை மூளையின் குட்டித்தூக்கம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது எலிகளின் செயற்பாட்டை குறிப்பாக சில விடயங்களில் கவனம் செலுத்தும் ஆற்றலைப் பாதிக்கின்றதா என்றும் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

எனவே மனித மூளையில் ஏற்படும் இலேசான சோர்வு சில சிறிய தவறுகளுக்குக் காரணமாகின்றன என்பது தான் ஆய்வாளர்களின் முடிவாகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts