background img

புதிய வரவு

பலாக்காய் பொரியல்

பெரிய தேங்காய் அளவு உள்ள பலாக்காய் ஒன்றை அறிந்து அதில் உள்ள பலாப்பிஞ்சுகளை எடுத்து சுமாரான அளவில் அரிந்து கொள்ளவும்.

பிறகு, ஆழாக்கு தண்ணீரில் போதிய அளவு உப்பும், மஞ்சள் பொடியும் போட்டு நன்றாக வேகவைத்து, தண்ணிரைக் கொடவிட்டு பலாப்பிஞ்சுகளை எடுத்துக் கொள்ளவும்.

கால் ஆழாக்குப் பயற்றம் பருப்பை நெந்யில் வறுத்து, அரை ஆழாக்கு தண்ணீர் வேகவிடவும்.

மிளகாய் இரண்டு, மிளகு ஆறு, மல்லி ஒரு தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் இரண்டு தேக்கரண்டி இவற்றை நெய்விட்டு வறுத்து நன்கு அரைத்து பின்னர், கால் ஆழாக்கு தண்ணீரில் கரைத்துப் பருப்பில் கொட்டி பலாப்பிஞ்சுத் துண்டுகளைப் போடவும்.

பலாப்பிஞ்சு நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும், தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம் சிறிதளவு, சீரகம் அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிது போட்டு சிவந்ததும் பலாப்பிஞ்சுகளை அத்துடன் கொட்டி, தேங்காயத் துருவல் கால் முடி போட்டு, மல்லி தழை போட்டு கிளறி இறக்கவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts