கெய்ரோ:ஒசாமா பின்லாடனின் பேச்சு அடங்கிய ஆடியோவை, அல்-குவைதா அமைப்பு வெளியிட்டுள்ளது.அல்-குவைதா அமைப்பின் தலைவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லாடன், கடந்த 2ம் தேதி, பாகிஸ்தானில், அமெரிக்க அதிரடி படையால் கொல்லப்பட்டார்.அவர் கொல்லப்படுவதற்கு, சில வாரங்களுக்கு முன்பாக பேசிய அவரது, 13 நிமிட உரை அடங்கிய ஆடியோவை, அல்-குவைதா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது, பெரும்பாலான அரேபிய இணையதளங்களில் வெளியாகியுள்ளது.இந்த ஆடியோவில் ஒசாமா குறிப்பிடுகையில், "வட ஆப்ரிக்காவின் மக்ரெப் பகுதியில் துவங்கிய புரட்சி தீ, துனிசியா, எகிப்து என பரவி வருகிறது. இது, பாராட்டுக்குரியது. மக்களின் ஒடுக்கப்பட்ட உணர்வுகள், தாமதமாக கிளர்தெழுந்ததால் தான் இந்த புரட்சி உருவாகியுள்ளது. இறைவன் அருளால் இந்த புரட்சி உலகம் முழுவதும் பரவும்' என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment