background img

புதிய வரவு

தி.மு.க.வில் இணையும் விழா: சேகர்பாபு நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். அவர் தி.மு.க.வில் ஆதரவாளர்களுடன் முறைப்படி இணையும் விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தார். இந்த விழா நாளை பழைய வண்ணாரப்பேட்டை தியாகராஜர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஆனால் இங்கு விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்த கல்லூரி மாணவர் பாலாஜிராவ் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் கல்லூரி மைதானத்தை அரசியல் விழாவுக்கு விடுவது தவறான போக்கு. இதனால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படும். மைதானம் சேதப்படுத்தப்படும் எனவே இங்கு அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கூடாது. சேகர் பாபு நடத்தும் விழாவுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சேகர்பாபு தரப்பில், இந்த மைதானத்தில் ஏற்கனவே அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. அதன்படிதான் நாங்களும் நடத்துகிறோம் என்று கூறப்பட்டது. கல்லூரி நிர்வாகம் தரப்பில் தியாகராயர் கல்லூரி அறக்கட்டளை பணம் தேவைக்காக மைதானத்தில் அரசியல் நிகழ்ச்சி நடத்த அனுமதி தருகிறோம் என்று கூறினார்கள்.

இதையடுத்து நீதிபதி சேகர்பாபு நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கூறினார்கள். ஆனால் மைதானத்தை சேதப்படுத்தினால் நிகழ்ச்சி நடத்துபவர்களே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts