background img

புதிய வரவு

வெண்டிலேட்டரில் ஓடுகிறது அ.தி.மு.க.,: மு.க.அழகிரி "கமென்ட்'

மதுரை: ""வெண்டிலேட்டரில் அ.தி.மு.க., அணி ஓடுகிறது. ஏப்., 13ல் வெண்டிலேட்டரை மக்கள் பிடுங்கி விடுவர்,'' என மத்தியமைச்சர் மு.க.அழகிரி குறிப்பிட்டார்.

அவரை, பார்வர்ட் பிளாக் (சுபாஷிஸ்ட்) பொது செயலாளர் முத்தையா பசும்பொன், பார்வர்ட் பிளாக்(தினகரன்) நிர்வாகி தினகரன், திரிணமுல் காங்., மாநில தலைவர் கணேசன் சந்தித்து, தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம் உட்பட 50 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு மு.க.அழகிரி பொன்னாடை அணிவித்தார்.பின் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணிக்கு ஏற்கனவே சந்தானம் தலைமையிலான பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்தது. தற்போது சுபாஷிஸ்ட், தினகரன் பிரிவு பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்துள்ளது. அ.தி.மு.க., அணி வெண்டிலேட்டரில் ஓடுகிறது. வெண்டிலேட்டரை பிடுங்கி விட்டால், கதை முடிந்து விடும். ஏப்., 13ல் மக்கள், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிப்பதன் மூலம் வெண்டிலேட்டரை பிடுங்கி விடுவர்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததன் மூலம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் "ரோஷக்காரர்' இல்லை என நிரூபித்து விட்டார். தேர்தலுக்கு இருபது நாட்கள் உள்ளன. அதற்குள் அவர் இன்னும் ஜெயலலிதாவால் என்னென்ன பாடுபட போகிறாரோ? தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்பு, இயக்குனர் பாக்யராஜ், மத்தியமைச்சர் நெப்போலியன், நடிகர் வடிவேலு, துணை முதல்வர் ஸ்டாலின் ஈடுபடவுள்ளனர். முதல்வர் கருணாநிதி இன்று திருவாரூரில் பிரசாரத்தை துவக்குகிறார். மதுரைக்கு முதல்வர் வருகை குறித்து தேதி முடிவாகவில்லை. தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளுக்கும் செல்வேன். வெற்றிக்கு தேவையான வியூகங்களை வகுத்து கொடுப்பேன். கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, என்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, துணை மேயர் மன்னன், இளைஞரணி செயலாளர் ஜெயராமன் உடனிருந்தனர்.

"நானும் எம்.ஜி.ஆர்., ரசிகன்': ரத்தினம் அணிந்திருந்த அ.தி.மு.க., துண்டை அகற்றும்படி கூறிய மு.க.அழகிரி, தி.மு.க., துண்டை அணிவித்தார். பெரியசாமி என்ற தொண்டர், ""நான் எம்.ஜி.ஆர்., ரசிகன். தி.மு.க.,வில் சேருகிறேன்,'' என்றார். அதை கேட்ட மு.க.அழகிரி, ""நானும் எம்.ஜி.ஆர்.,ரசிகன் தான்,'' என்றார். ""அ.தி.மு.க.,வை துவக்கியதில் இருந்து இருக்கிறேன். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டேன். சசிகலா ஆதிக்கம் உள்ளது. தொண்டர்களால், ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை,'' என்றார் ரத்தினம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts