background img

புதிய வரவு

தமிழ்நாட்டுப் பெண் ஐ.ஏ.எஸ்ஸில் முதலிடம்

சென்னை, மே 11: இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) 2010 தேர்வில் தமிழக மாணவி முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது ரேங்குகளையும் தமிழகம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும். 2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்திலிருந்து 22 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 847 பேர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 240 பேர். கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் திவ்யதர்ஷிணி என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் 3-வது ரேங்க்கை தமிழகத்தைச் சேர்ந்த வருண்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். அபிராமசங்கர் என்ற மாணவர் 4-வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதோடு, மிகக் குறைந்த 22 வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், இப்போது குடும்பத்துடன் கேரளத்தில் வசித்து வருகிறார். இதுபோல் 8-வது ரேங்க்கை அரவிந்த் என்ற தமிழக மாணவர் பெற்றுள்ளார். முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறை. கடந்த 2005-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மாணவர் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts