சென்னை: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிப்பயணத்தை தொடர தோனி அணி காத்திருக்கிறது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சேவக் இல்லாத டில்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
எட்டாவது வெற்றி:
சென்னை அணி, இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7ல் வெற்றி கண்டது. கடைசியாக ராஜஸ்தான் அணியை வீழ்த்திய சென்னை கிங்ஸ், இன்று டில்லியை சமாளிக்கும் பட்சத்தில், 8வது வெற்றியை பதிவு செய்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யலாம்.
"டாப்-ஆர்டர்' பலம்:
இம்முறை, மற்ற அணிகளை ஒப்பிடும் போது சென்னை கிங்ஸ் "டாப்-ஆர்டர்' பலமாக காட்சி அளிக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக அரைசதம் கடந்து எழுச்சி கண்ட முரளி விஜய், இன்றும் சாதிக்கலாம். இதுவரை 9 போட்டிகளில் 388 ரன்கள் எடுத்துள்ள மைக்கேல் ஹசி, இன்றும் ரன் வேட்டை நடத்தலாம். "சூப்பர் பார்மில்' உள்ள சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, ஆல்பி மார்கல் உள்ளிட்டோர் அதிரடியாக ரன் குவிக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்து சுலப வெற்றி பெறலாம். "டாப்-ஆர்டர்' ஏமாற்றும் பட்சத்தில் "மிடில்-ஆர்டரில்' பத்ரிநாத் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
போலிஞ்சர் எழுச்சி:
சென்னை அணியின் மிகப்பெரிய பலம் சுழற்பந்துவீச்சு. இதுவரை 12 விக்கெட் வீழ்த்தியுள்ள அஷ்வின், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருடன் ஜகாதி, ரெய்னா, ரந்திவ் உள்ளிட்டோர் சுழலில் அசத்தி வருவது கூடுதல் பலம். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்தி வேகத்தில் எழுச்சி கண்ட போலிஞ்சர், இன்றும் கைகொடுக்கலம். இதுவரை 13 விக்கெட் கைப்பற்றி, "சூப்பர் பார்மில்' உள்ள ஆல்பி மார்கல் இருப்பது வேகத்தின் பலத்தை அதிகரித்துள்ளது.
ஆறுதல் வெற்றி:
டில்லி அணி, இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி கண்டது. மீதமுள்ள 3ல் வெற்றி கண்டால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பலமான சென்னை அணிக்கு எதிராக முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், ஆறுதல் வெற்றி பெறலாம்.
சேவக் இல்லை:
தோள்பட்டை காயம் காரணமாக கேப்டன் சேவக், மீதமுள்ள மூன்று போட்டிகளில் பங்கேற்கமாட்டார். இது டில்லி அணிக்கு பின்னடைவான விஷயம். இருப்பினும் "டுவென்டி-20 ஸ்பெஷலிஸ்ட்' டேவிட் வார்னர், அதிரடி காட்டினால் நல்லது. கேப்டன் பொறுப்பில் ஜேம்ஸ் ஹோப்ஸ் நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்ராம், நமன் ஓஜா, வேணுகோபால், இர்பான் பதான் உள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.
மார்கல் எதிர்பார்ப்பு:
டில்லி அணியின் வேகப்பந்துவீச்சில் மார்னே மார்கல் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறார். இவர், சென்னை அணிக்கு எதிராக சாதிக்கும் பட்சத்தில் விக்கெட் மழை பொழியலாம். இவருக்கு இர்பான் பதான், அகார்கர், ஹோப்ஸ் உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டும். சுழலில் அனுபவ வீரர்கள் இல்லாதது பின்னடைவான விஷயம்.
---
ஏழாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில், சென்னை சூப்பர் கிங்ஸ்-டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஏழாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஆறு போட்டிகளில் இவ்விரு அணிகள் தலா 3ல் வெற்றி கண்டன.

0 comments :
Post a Comment