background img

புதிய வரவு

விவசாயிகள் பிரச்னையை தீர்க்காத அரசு நீடிக்காது: ஜெகன் ஆவேசம்

குண்டூர் : "விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத எந்த அரசும், பதவியில் நீடிக்க முடியாது' என, ஒய்.எஸ். ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

ஆந்திர விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவரும், கடப்பா லோக்சபா தொகுதிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி, குண்டூரில் இரண்டு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

நேற்று, தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட அவர், அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசியதாவது:ஆந்திராவில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி தவிக்கின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்க்க, மாநில அரசு முன்வரவில்லை. பஞ்சாப் மாநில அரசு, அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து 130 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்து, அதன் பின், இந்திய உணவு கழகத்துக்கு, அந்த நெல்லை விற்பனை செய்கிறது. ஆந்திர அரசும், அதுபோன்ற நடவடிக்கையில் ஏன் ஈடுபடக் கூடாது. விவசாயிகளிடம் இருந்து, அரிசியை கொள்முதல் செய்து, இந்திய உணவு கழகத்திடம், ஏன் விற்க கூடாது?விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்காத எந்த அரசும், பதவியில் நீடிக்க முடியாது.

என்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டுவது குறித்து தான், கிரண் குமார் ரெட்டி அரசு சிந்தித்து வருகிறதே தவிர, மற்ற பணிகளில் ஈடுபாடு கட்டுவது இல்லை. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, முதல்வராக இருக்கும் போது, விவசாயத்தில் ஈடுபடுவது வீணான முயற்சி என்றார். தற்போது விவசாயிகள் பிரச்னைக்காக, கண்ணீர் விடுகிறார்.என் தந்தை ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது, ஆந்திராவில் விவசாயத் துறை சிறப்பான வளர்ச்சி பெற்றிருந்தது. தற்போது விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts