background img

புதிய வரவு

கருப்பு பண பிரச்சனை: மத்திய அமைச்சரவை ஆலோசனை

கருப்பு பண பிரச்சனை தொடர்பாக இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. . 

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக நடந்துகொள்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்ட சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், புதிய அமைச்சரவை இன்று டெல்லியில் கூடியது. 

இதில் கருப்பு பண விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்ததால், அப்பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. 

இந்த பிரச்சனை பொதுமக்களிடையே பரவலாக விவாதிக்கப்படுவது குறித்தும், எதிர்கட்சிகள் இப்பிரச்சனையை வைத்துக்கொண்டு அரசை கடுமையாக தாக்கி வருவது குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவை கூட்டத்தில் கவலை தெரிவித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts