background img

புதிய வரவு

ரசமாலை

செய்முறை:

பால் 1 லீட்டர்
சீனி 500 கி
பன்னீர் 250 கி
குங்குமபூ கொஞ்சமாக
பாதாம் பருப்பு சிறிதாக வெட்டியது 3 தே.க
பிஸ்டாஜ்ஸிஜோஸ் சிறிதாக வெட்டியது 3 தே.க
ஏலக்காய் தூள் 1/2 தே.க

1. ஒரு பாத்திரத்தில் 250 கிராம் சீனியையும்,நீரும் சேர்த்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வையுங்க.
2. இன்னோர் பாத்திரத்தில் பாலையும், மீதியிருக்கும் சீனியையும் கலந்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்து அரைவாசி ஆகும் வரை அடுப்பில் இருந்து இறக்க வேண்டாம்.
3. பால் பாதியானதும் அதில் ஏலக்காய் பொடி, வெட்டிய பருப்புகள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் இருந்து இறக்குங்க.
4. பன்னீரை எடுத்து சிறு உருண்டைகளாக்கி சற்று அமத்தினால் சரியான வடிவம் கிடைத்துவிடும்.
5. இவ்வுருண்டைகளை கொதித்து கொண்டிருக்கும் சீனியில் போட்டு 10 நிமிடங்களுக்கு அவித்து எடுங்க. அவிக்கும் போது பாத்திரம் மூடியிருக்க வேண்டும்.
6. 10 நிமிடத்தில் பன்னீரை வெளியே எடுத்து வையுங்க. சீனிகரைசல் வடிவதற்கு சிறிது நேரம் குடுங்கள்.
7. ஏற்கனவே கொதிக்க வைத்த பாலில் பன்னீர் உருண்டைகளை போட்டு மேலும் 4-5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்க.
8. 4-5 நிமிடங்களின் பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவிடுங்க. சிலர் சிறிது சூடாக இருக்கும் போது சாப்பிடுவார்களாம். பெரும்பாலானோர் சூடு ஆறியதும் 5 மணித்தியாலங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்த பின்னர் சாப்பிடுவார்களாம். எது எப்படியோ கஸ்டபட்டு செய்ததை சாப்பிட்டால் சரி தான்.

குறிப்புகள்:
1. கொதிக்கும் சீனி கலவைக்கு எப்போதும் மதிப்பு குடுங்க.
2. சீனிகரைசலில் அவித்த பன்னீரே சுவையாக இருக்கும். வீட்டில் அண்ணன், தம்பி இருந்தால் சற்று கவனமாக இருக்கவும். பாலில் போடா முன்னரே பாதி பன்னீரை நான் இழந்துவிட்டேன்.
3. பால், சீனி என பயங்கரமா இருக்கு. அடிக்கடி செய்து சாப்பிடாதிங்க.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts