background img

புதிய வரவு

திருமணத்துக்கு மும்பையில் உடை வாங்கும் கார்த்தி

நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. இதற்காக தனக்கும் எதிர்கால மனைவிக்குமான உடைகளை மும்பையில் டிசைன் செய்து வாங்குகிறார் கார்த்தி.

கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் வேகமாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப் புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

மறுநாள் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணமகன், மணமகள் இருவரும் அணிவதற்காக பிரத்தியேக ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆடைகளை தேர்வு செய்வதற்காக நடிகர் கார்த்தி மும்பை சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள பிரபல துணிக் கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள்.

திருமண வரவேற்புக்கும் இங்கேயே உடைகளை வாங்குகிறார் கார்த்தி.

நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது இத்தாலி பல்கலைக்கழகம்

மிலன்: 110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ளது மிலன் பல்கலைக்கழகம் (Universita Popolare Degli Studi Di Milano - UUPN). 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வி நிறுவனம் இது. மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும் இதனை அழைக்கின்றனர்.

நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த பல்கலைக் கழகம்.

இந்த ஆண்டு தமிழ் நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது மிலன் பல்கலைக்கழகம். ஐரோப்பிய பல்கலைக் கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை மிலன் பல்கலைக் கழகத்தின் தலைவர் போராசிரியர் டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.

பட்டத்தை ஏற்றுக் கொண்ட விக்ரம், பின்னர் வந்திருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

90 குழந்தை பெற்றும் ஆசை தீரவில்லை: 19-வது மனைவியை தேடும் சவுதி அரேபியா நாட்டு கிழவர்; 20 வயது படித்த இந்திய பெண் வேண்டும் என்கிறார்

ஐக்கிய அரபு குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது அல்பலுசி. 65 வயதாகும் இந்த கோடீசுவரர் இதுவரை 17 பெண்களை திருமணம் செய்துள்ளார். 17 மனைவி மூலம் இவருக்கு 90 குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த 90 பேரில் பலருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது.

அந்த வகையில் முகம்மது அல்பலுசிக்கு 50 பேரன்- பேத்திகள் உள்ளனர். தற்போது அவரது மனைவிகளில் 2 பேர் கர்ப்பமாக உள்ளனர். எனவே முகம்மது அல்பலுசியின் குழந்தைகள் எண்ணிக்கை விரைவில் 92 ஆக உயர உள்ளது.

என்றாலும் முகம்மது அல்பலுசிக்கு இன்னமும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையும் விடவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பாகிஸ்தான் பெண் ஒருவரை 18-வது மனைவியாக திருமணம் செய்ய உள்ளார்.

முகம்மது அல்பலுசிக்கு திருமணம் செய்து கொள்ளும் 4-வது பாகிஸ்தான் பெண் இவர் ஆவார். சட்ட விதிகள் குறுக்கிட்டாலும் இவர், அதற்கு ஏற்ப வளைந்து கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்.

விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்த முகம்மது அல்பலுசி அடுத்த மாதம் ஜெய்ப்பூர் வந்து செயற்கைகால் கருவிகளை மாற்ற திட்டமிட்டுள்ளார். அப்போது அவர், இந்திய பெண் ஒருவரை 19-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

இது குறித்து முகம்மது அல்பலுசி கூறியதாவது:-

என்னை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பேசுவது ஒன்றும் நடந்து கொள்வது ஒன்றுமாக இருப்பார்கள். எனக்கு தற்போது இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

எனது 17 மனைவிகளும் படிக்காதவர்கள். எனவே இந்திய பெண் 18 முதல் 22 வயதுக்குள்ளும் படித்தவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு முகம்மது அல்பலுசி கூறினார்.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு இந்திய பெண்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்றார்.

2ஜி: நாடாளுமன்ற குழு முன் சிஏஜி வினோத் ராய் ஆஜர்-ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு குறித்து விளக்கம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் தலைமை கணக்கு தணிக்கைத் துறை அதிகாரி வினோத் ராய் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்தே இந்த விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்தது. இதனால் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.

இந்த ஊழல குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக இது குறித்து நாடாளுமன்றத்தின் அரு அவைகளைச் சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவுக்கு முன்பு பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைவராக இருந்து விசாரணை நடத்தினார். குழுவின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமலேயே தானாகவே ஒரு அறிக்கை தயாரித்து சபாநாயகரிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடு்த்து அவரது பதவிக் காலம் முடிந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ இந்தக் குழுவின் தலைவராக உள்ளனர்.

இந்தக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக் குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் ஆஜரானார்.

அவரிடம், கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வினோத் ராய் விளக்கம் அளித்தார்.

1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத் ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாகக் கூறியதாகத் தெரிகிறது.

முன்னதாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் ஆஜராகி ராய் விளக்கம் தந்துள்ளது நினைவுகூறத்தக்கது.

மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிகை வனிதா உண்ணாவிரதம்

நடிகை வனிதாவுக்கும் அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை இருவரும் தங்களிடம் ஒப்படைக்க கோரி போராடி வருகின்றனர். தற்போது விஜய் ஸ்ரீஹரி ஆகாஷ் வசம் இருக்கிறான். அவனை தன்னிடம் ஒப்படைக்கும்படி வனிதா வற்புறுத்தி வருகிறார்.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “விஜய் ஸ்ரீஹரி வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்றும் மற்ற நாட்கள் ஆகாஷ் பாதுகாப்பில் இருக்க வேண்டும்” என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு தீர்ப்புப்படி மகனை ஆகாஷ் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வனிதா நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இப்பிரச்சினை மீது போலீசார் விசாரணை நடத்தினர். விஜய் ஸ்ரீஹரியிடம் போலீசார் பேசினர். அப்போது அவன் வனிதாவுடன் செல்ல பிடிவாதமாக மறுத்து விட்டான்.

இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தியது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வற்புறுத்தி வனிதா இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

காலை 12 மணிக்கு படுக்கையுடன் சாலிகிராமம் லோகையா வீதி 5-வது குறுக்கு தெருவில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். தனது பெண் குழந்தையையும் உடன் அழைத்து வந்தார். ஆகாஷ் வீட்டு முன் படுக்கையை விரித்தார். அதில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வனிதாவிடம் அவர்கள் சமரசம் பேசினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பது பற்றி வனிதா கூறியதாவது:-

எனது மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கடந்த 7 மாதங்களாக ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வந்து விட்டேன். ஆனாலும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.

என் குழந்தையை என்னுடன் அனுப்ப ஆகாஷ் மறுக்கிறார். என்னைப் பற்றி தவறான தகவல்களை ஸ்ரீஹரியிடம் சொல்லி என்னுடன் சேர விடாமல் மிரட்டுகிறார். என் குழந்தை இல்லாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்.

தண்ணீர், சாப்பாடு, கூட சாப்பிட மாட்டேன். இங்கிருந்து என் குழந்தையோடுதான் செல்வேன். இல்லையென்றால் சாவேன். ஆகாஷ் செய்யும் தவறை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் தவறு செய்கிறார்கள்.

என் குழந்தை என்னிடம் சேராமல் இருப்பதற்கு போலீசாரும் ஒரு காரணம். இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என் குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

பெத்த குழந்தையை மீட்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்சினைக்கு பின்னால் என் தந்தை இருக்கிறார். கோர்ட்டு உத்தரவுபடி என் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு வனிதா கூறினார்.

வனிதா உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுபடி விஜய் ஸ்ரீஹரி விருப்பபட்டால் வனிதாவை 3 நாட்கள் சந்திக்கலாம். அவன் தனது தாயாரை பார்க்க விருப்பம் இல்லாத பட்சத்தில் அவனை சமாதானப்படுத்தி தாயார் வனிதாவிடம் அனுப்பலாம். ஆனால் அவன் போக மறுக்கிறான். தாயார் குழந்தையிடம் அன்பாக இருந்தால் பாசத்துடன் செல்லும். அவனை வனிதாவிடம் செல்ல கட்டாயப்படுத்தினால் அவரிடம் செல்ல மறுத்து அடம் பிடிக்கிறான்.

அதனால் மனோத்துவ டாக்டரை அணுகி குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறேன். 3 வருடம் குழந்தை ஹரி வனிதாவிடம் இருந்தது. இப்போது 3 நாள் அவருடன் அனுப்புவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. என்னிடம் இருந்து அவன் செல்ல மறுக்கிறான். ஆனால் வலுக்கட்டாயமாக வனிதா இழுப்பதால் வெறுக்கிறான். இதனால் திடீர் என்று அவன் எப்படி மாறுவான்.

இவ்வாறு ஆகாஷ் கூறினார்.

டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது; ராசாத்தி அம்மாள் பேரனுடன் வந்தார்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு அவர்களது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால், அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாட்களாக கனிமொழியும், சரத்குமாரும் ஜெயிலில் இருந்து வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் கடந்த 23-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை.

கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான் எனக்கு பண பரிவர்த்தனையில் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி பரிகோகே, அடுத்த விசாரணை 30-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் திகார் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவர் தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார். கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி பேசிக்கொண்டிருந்தார். நீதிபதி பரிகோகே முன்னிலையில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மதியம் 2 மணி முதல் நடந்தது.

கனிமொழி சார்பில் ஆஜரான வக்கீல் மனுவில் கூறி இருப்பதை வலியுறுத்தினார். இதையடுத்து சி.பி.ஐ. சார்பில் வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று பிற்பகல் தெரியவரும். கரீம் மொரனிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதும் இன்று தெரியும். டெல்லி ஐகோர்ட்டு வளா கத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது.

இதனால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

சபாநாயகர் அறையில் கருணாநிதி, எம்.எல்.ஏ.வாக இன்று பதவி ஏற்றார்

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 229 பேர் கடந்த 23-ந்தேதி பதவி ஏற்றனர். அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் பதவி ஏற்கவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், துரைமுருகனும் அன்றைய தினம் டெல்லி சென்றதால் பதவி ஏற்கவில்லை. கடந்த 27-ந்தேதி அமைச்சர் சிவபதி, திருச்சி மனோகரன் ஆகியோர் எம்எ.ல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், சட்டசபை தி.மு.க. துணைத் தலைவர் துரைமுருகனும் இன்று காலை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இதற்காக, 2 பேரும் இன்று புனித ஜார்ஜ்கோட்டையில் உள்ள சபாநாயகர் அறைக்கு காலை 11 மணிக்கு வந்தனர்.

அப்போது சபாநாயகருக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை கொடுத்து பதவி ஏற்றார். உளமாற என்று கூறி உறுதிமொழி எடுத்து கொண்டார். உறுதி மொழி பத்திரத்திலும், சட்டமன்ற பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து துரைமுருகனும் பதவி ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், சற்குண பாண்டியன், தி.மு.க. கொறடா சக்கரபாணி, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, எம்எ.ல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வந்த கருணாநிதியிடம், சட்ட சபையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை எப்படி இருக்கும்? என்று கேட்டபோது, கூர்ந்து கவனியுங்கள் என்று பதில் அளித்தார்.

ஒரு மாதத்திற்குள் தென்காசி வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்-சரத்குமார்

தென்காசி: ஒரு மாதத்திற்குள் தென்காசிக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, தென்காசியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவில நடவடிக்கைகளில் இறங்கவுள்ளேன் என்று நடிகரும், தென்காசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் சரத்குமார். தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற தென்காசி வந்த அவர் அங்கு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது தொகுதி மக்களிடையே அவர் பேசுகையில், தென்காசி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை முடுக்கி விடவுள்ளேன்.

தொழில்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது தென்காசி. இங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சரத்குமார்.

சாதித்துக் காட்டிய சென்னை கிங்ஸ் அணி: விஜய், அஷ்வினுக்கு தோனி பாராட்டு

சென்னை: ஐ.பி.எல்., அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. இம்முறை சாம்பியன் கனவை நனவாக்கிய முரளி விஜய் அஷ்வினை, கேப்டன் தோனி வெகுவாக பாராட்டினார்.
இந்தியாவின் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பைனலில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(205/5), பெங்களூரு ராயல் சாலஞ்ர்ஸ் அணியை(147/8) வீழ்த்தி, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை இரண்டு முறை(2010, 11) வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை சென்னை அணி படைத்தது.

தமிழகத்துக்கு "ஜே':
அணியின் வெற்றியில் தமிழக வீரர்களான முரளி விஜய் (95 ரன்கள்), அஷ்வின்(3 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர். "ஆபத்தான' பெங்களூரு வீரர் கெய்லை "டக்' அவுட்டாக்கிய அஷ்வின், மீண்டும் ஒரு முறை தனது சுழல் திறமையை வெளிப்படுத்தினார். சென்னை அணிக்கு இன்னொரு முறை கோப்பை பெற்று தந்த "லக்கி' கேப்டன் தோனி கூறியது:
பைனலில் வெல்வதே ஒவ்வொரு வீரரின் நோக்கமாக இருக்கும். இதற்கேற்ப சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து அபார துவக்கம் தந்தனர். இவர்கள் 15வது ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடியது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதனால் தான் 200 ரன்களுக்கும் மேலான ஸ்கோரை எட்ட முடிந்தது.
அஷ்வின் மிகுந்த துணிச்சலாக பந்துவீசினார். "பீல்டிங்' கட்டுப்பாடு இருக்கும் போது வெளிவட்டத்தில் இரண்டு வீரர்கள் தான் இருப்பார்கள். இதனைப் பற்றி கவலைப்படாமல், பந்தை நல்ல உயரத்தில் வருமாறு சாதுர்யமாக வீசினார். அணிக்கு தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தார்.
கடந்த ஐ.பி.எல்., தொடரில் தட்டுத்தடுமாறி தான் அரையிறுதிக்குள் நுழைந்தோம். இம்முறை ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடியதால், சிரமமின்றி கோப்பை வென்றோம்.

சிறிது ஓய்வு:
களத்தில் சிறப்பான முறையில் நடந்து கொண்ட அணிக்கான நன்னடத்தை விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டால் தான் வெற்றி பெற இயலும் என்று சொல்வார்கள். ஆனால், நேர்மையான முறையில் நடந்து கொண்டு, வெற்றியும் பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக வீட்டுக்கே செல்லவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்காத நிலையில், ராஞ்சிக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளேன்.
ரசிகர்கள் சோர்வு:
உலக கோப்பை தொடர் முடிந்த கையுடன் ஐ.பி.எல்., போட்டிகள் நடந்தது கடினமானதாக தான் இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் உலக கோப்பை வெல்ல வேண்டுமென விரும்பினார்கள். இதற்கேற்ப நாங்களும் வென்று காட்டினோம். உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிப்பூர்வமாக சோர்வடைந்த ரசிகர்கள், துவக்கத்தில் ஐ.பி.எல்., போட்டிகளை காண அதிகளவில் வரவில்லை. போகப் போக போட்டியை காண ஆர்வத்துடன் மைதானத்துக்கு திரண்டு வந்தனர்.
இவ்வாறு தோனி கூறினார்.

தோல்வி அடைந்த பெங்களூரு கேப்டன் வெட்டோரி கூறுகையில்,""பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட தவறினோம். 200 ரன்களுக்கு மேல் செய்வது "சேஸ்' செய்வது கடினம். 160 முதல் 170 ரன்கள் என்றால் "சேஸ்' செய்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக இத்தொடர் சிறப்பானதாக அமைந்தது. லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றதை சாதனையாக கருதுகிறேன்,''என்றார்.

இரவெல்லாம் உற்சாகம்
கோப்பை வென்ற உற்சாகத்தை அதிகாலை வரை சென்னை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த "பார்ட்டி'யில் அனைவரும் பங்கேற்றனர். கால்பந்து பிரியரான கேப்டன் தோனி மட்டும் தனது மனைவியுடன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலை பார்த்தாராம். இதில், தனக்கு பிடித்தமான மான்செஸ்டர் யுனைடெட் அணி, பார்சிலோனாவிடம் தோற்றதால் மிகுந்த கவலை அடைந்திருக்கிறார். பின் சக வீரர்களுடன் சேர்ந்து "பார்ட்டி'யில் சிறிது நேரம் பங்கேற்றுள்ளார்.
விருதுகளும்...பரிசுகளும்...

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாதித்த அணிகள் மட்டுமின்றி தனிப்பட்ட வீரர்களும் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

* கோப்பை வென்ற சென்னை அணி ரூ. பத்து கோடி பரிசாக பெற்றது.
* இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு அணி ரூ. ஐந்து கோடி பரிசாக பெற்றது.
* ஆட்ட நாயகன் விருது வென்ற முரளி விஜய்( 95 ரன்கள்) ரூ. ஐந்து லட்சம் பரிசாக பெற்றார்.
* இத்தொடரில், 608 ரன்கள் குவித்த பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் தொடர் நாயகன் விருதை வென்றார். இவருக்கு ரூ. ஐந்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. தவிர, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த இவர், "ஆரஞ்ச்' நிற தொப்பியை கைப்பற்றியதால், ரூ. பத்து லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது. இத்தொடரில் அதிக "சிக்சர்' (44) விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த பெருமை இவரையே சேரும்.
* இத்தொடரில், அதிக விக்கெட்(28 விக்கெட்) வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லா, 15 போட்டிகளில் 16 விக்கெட் கைப்பற்றினார். இதனால் வளரும் வீரருக்கான விருதை வென்ற இவருக்கு ரூ. பத்து லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது.
* அதிக "கேட்ச்' பிடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் போலார்டு(10 "கேட்ச்')ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் வல்தாட்டி, 63 பந்தில் 120 ரன்கள் எடுத்தார். தவிர இவர் 14 போட்டிகளில் 463 ரன்கள் குவித்தார். இதனால் தனிநபர் சாதனையாளர் விருது வென்ற இவருக்கு, கார் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது.
* இத்தொடரின் சிறந்த ஆடுகளத்திற்கான விருது, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்திற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

ஹீரோவாகிறார் நமீதா!

கவர்ச்சி கன்னியாக, கனவு தேவதையாக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி நமீதா, ஹீரோவாக களம் இறங்குகிறார் என்றால் நம்பமுடியாமல் தான் இருக்கும், இனி அவர் தூங்காமல் இருக்கப் போகிறார், பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில், எஸ்.ஆர்.மனோகரன் தயாரிப்பில், பிரபல இயக்குநர் மங்கை அரிராஜன் இயக்கத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

சாதாரண கேரக்டரில் இல்ல, காக்கி சட்டையில் கலக்கப் போகிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார் நமீதா. "இ‌ளமை ஊஞ்சல்" என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இப்படம், சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், மற்றும் பிரான்சில் படமாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள்

கடந்த 1989ல், தேர்தலுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 1977, 1980 மற்றும் 1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களை பிடித்து கருணாநிதி முதல்வரானார். பின் 1991ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 1996ல் நடந்த தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார்.தொடர்ந்து 2001ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க., கூட்டணியுடன் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்து ஜெயலலிதா முதல்வரானார். 2006 தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடித்து கருணாநிதி முதல்வரானார். 2011 தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜெ., முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறை தமிழகத்தில், கடந்த 22 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இந்த வரலாறு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை காலம் உணர்த்தும். மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தது இல்லை என்ற வரலாறும் நீடிக்கிறது.இதேபோன்ற பெருமை, அண்டை மாநிலமான கேரளாவுக்கும் உண்டு. கேரளாவில் 1957ல், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, அம்மாநில மக்கள் ஆட்சியை மாற்றி மாற்றி கொடுத்துள்ளனர். 1969-70 மற்றும் 1970-77ம் ஆண்டுகளில் சி.அச்சுதமேனன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். 1981-82 மற்றும் 1982-87ம் ஆண்டுகளில், கருணாகரன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இவை மட்டுமே விதிவிலக்காக உள்ளன. மற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநில மக்களின் வரலாறாக இருந்து வருகிறது.

ஆட்டநாயகன் விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்: முரளிவிஜய்

4 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டநாயகன் முரளிவிஜய் (சென்னை),


ஒரு அணியாக நாங்கள் உண்மையிலேயே சிறப்பாக விளையாடினோம். தொடக்க வீரர் மைக் ஹஸ்ஸி எனக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆட்டநாயகன் விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

காமாட்சியம்மன் கோவிலில்விஜயகாந்த் வழிபாடு

காஞ்சிபுரம்:சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்கு முன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சென்று வழிபட்டார். காமாட்சி அம்மன் கருவறையில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். காமாட்சி அம்மன் மற்றும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றினார். இவருடன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., முருகேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.

பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த ரஜினி

சிறுநீரக பாதிப்புக்காக நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். சிங்கப்பூருக்கு சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 29.05.2011 அன்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார்.

டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார். பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்கிங்- பேட்மின்டன் - சுவையான இட்லி சாம்பார்;ராஜாவின் ஜெயில் வாழ்க்கை குறிப்பு இது.,

புதுடில்லி: கடந்த 3 மாத காலமாக ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா முதலில் சக கைதிகள் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். ஆனால் போக, போக சகஜமாக பழகிவிட்டார், காலை எழுந்தவுடன் வாக்கிங், மாலையில் பேட்மின்டன் என தமது ஜெயில் வாழக்கையை கடந்து வருகிறார். மற்ற கைதிகளை விட அது வேணும், இது வேணும் என அடம் பிடிக்கவில்லை என்றாலும் தனக்கு தமிழ் நாளிதழ் மட்டும் கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். இதனை ஏற்று இவருக்கு ஜெயில் அதிகாரிகள் வாங்கி கொடுத்துள்ளனர். இவரது நடவடிக்கை முழு திருப்தி அளிப்பதாகவும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஜெயில் அதிகாரி கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் மத்திய அமைச்சராக இருந்த ராஜா கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் தேதி திகார் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவருடன் 12 பேர் தற்போது ஜெயிலில் உள்ளனர். இதில் ராஜா 9 வார்டு சிறையில் 1 ம் நம்பர் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அன்றாட ஜெயில் வாழ்க்கை விவரத்தை ஒரு அதிகாரி கூறியுள்ளார். ராஜா நாள்தோறும் எவ்வாறு கழிக்கிறார் என்ற முழு விவரம் வருமாறு:

ராஜாவுடன் மாஜி போலீஸ் அதிகாரிகள் : இவருக்கு 15 க்கு 10 அளவு கொண்ட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயில் வளாகத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதியில் வாக்கிங் செல்கிறார். பின்னர் நேராக ஜெயிலுக்கு வந்து நாளிதழ்கள் படிக்கிறார். மாலையில் சக நண்பர்களுடன் ஒரு மணி நேரம் பாட்மின்டன் ஆடுகிறார். இரவில் சரியான நேரத்தில் தூங்கி விடுவார்.

இவரது வார்டுக்கு உட்பட்ட சிறையில் பத்திரிகையாளர் சிவானி பத்கர் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஆர். கே., சர்மா, மற்றும் கன்னாட் துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட உதவி கமிஷனர் எஸ். எஸ்., ரதி முக்கியஸ்தர்கள். ஏனைய 12 பேர் ஆயுள் உள்பட உயர்ந்த பட்ச தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சக கைதிகளுக்கும் உணவு வழங்கும் ராஜா :முதலில் ராஜா ஜெயில் கைதிகளுடன் சகஜமாக பழகாமல் உம்மெனவே இருந்தார். ஆனால் போக, போக தனது விறைப்புத்தன்மையை குறைத்து சிரித்து பேசலானார். ராஜாவுக்கு வீட்டு பதார்த்தம் வழங்க கோர்ட் அனுமதி தந்திருப்பதால் வீட்டில் சுடச்சுட தயாரான பதார்த்தங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இட்லி, சாம்பார், வடை, பொங்கல், மதியம் சாம்பார், ரசம், தயிர் என வரும். முதலில் சிரிய டிபன்பாக்சில் வந்தது தொடர்ந்து அதன் அளவு உயர்த்தப்பட்டது. இவைகளை தங்களுடைய சக கைதிகளுக்கும் கொடுத்து சாப்பிட சொல்கிறார். ஜெயில் சாப்பாட்டை சில நாட்களாக சாப்பிட்டும் கொள்கிறார். மேலும் இங்குள் கேண்டீனில் ஸ்னாக்ஸ் அயிட்டங்கள் வாங்கி கொள்ள அனுமதி உண்டு. ஜெயிலில் இருக்கும் ராஜா எவ்வித தொந்தரவும் தருவதில்லை, மற்ற கைதிகளுடன் ஒப்பிடுகையில் அவர் மிக சிறந்தவராக உள்ளார். தமிழ் பத்திரிகை எனக்கு அவசியம் வாங்கித்தர வேண்டும் என கேட்டார். அதற்கு மட்டும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஒரு ஜெயில் அதிகாரி.

கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா ? : தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் வருகிறது. மொரானியின் மனுவும் விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்: நடிகர் விஜய்

ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விஜய் பேசினார்.

சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் 29.05.2011 அன்று மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய்,

நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.


மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டிய போது எனக்கு பெருமையாக இருந்தது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது. இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை

மாணவ, மாணவிகளுக்கு கம்ப்ழூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.

இனி மேலும் சமூக நலப்பணியை தொடர்ந்து செய்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தி, ஜெயலலிதாவின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில். இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெட்டோரி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளது.

தோனியின் கேப்டன் பொறுப்பில் மேலும் அவருக்கு ஒரு மகுடம் சூட்ட்ப்பாட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்ற 4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதை தொடர்ந்து முரளிவிஜயும், மைக் ஹஸ்ஸியும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முந்தைய 2 ஆட்டங்களில் சொதப்பிய இருவரும், இந்த முறை உள்ளூர் ரசிகர்களுக்கு சரியான விருந்து படைத்தனர்.

எந்த ஒரு பந்தையும் வீணாக்கி விடக்கூடாது என்ற வியூகத்துடன் மட்டையை சுழற்றினர். ஒன்று, இரண்டு வீதம் அதிகமாக ஓடி ஓடி எடுத்தனர். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இருவரும் நிலைத்து நின்றதால், அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்து ரன்- ரேட் 10 ரன்களுக்கு மேலாக சென்றது. சில ரன்&அம்ப்;அவுட்டுகளில் இருந்தும் தப்பி பிழைத்தனர். ஜாகீர்கான், வெட்டோரி, அரவிந்த் உள்ளிட்ட பெங்களூர் அணியின் பந்து வீச்சு, இவர்களை எந்த வகையிலும் மிரட்டவில்லை.

இவர்கள் கொடுத்த சில வாய்ப்புகளை பெங்களூர் பீல்டர்கள் நழுவ விட்டனர். தனது அதிரடியால், மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய் 50 ரன்களில் இருந்த போது, கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். இந்த ஜோடியை பிரிக்க பெங்களூர் மேற்கொண்ட முயற்சிக்கு 15&அம்ப்;வது ஓவரில் தான் பலன் கிடைத்தது. ஆனால் அதற்குள் ஸ்கோர் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி எங்கேயோ சென்று விட்டது.

அணியின் ஸ்கோர் 159 ரன்களை எட்டிய போது, மைக் ஹஸ்ஸி 63 ரன்களில் (45 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். விஜய்&அம்ப்;ஹஸ்ஸி சேர்த்த 159 ரன்கள், ஐ.பி.எல். வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2008&அம்ப்;ம் ஆண்டு டெக்கான் அணிக்காக ஆடிய கில்கிறிஸ்ட்- லட்சுமண் ஜோடி மும்பைக்கு எதிராக 155 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை சென்னை வீரர்கள் நேற்று முறியடித்தனர்.

ஹஸ்ஸிக்கு பிறகு 2- வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி களம் புகுந்தார். மறுமுனையில் பட்டையை கிளப்பி, சதத்தை நெருங்கிய முரளிவிஜய் துரதிர்ஷ்டவசமாக 5 ரன்களில் செஞ்சுரியை தவற விட்டார். அவர் 95 ரன்களில் (52 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) அரவிந்தின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். கேப்டன் டோனி தனது பங்குக்கு 13 பந்துகளில் 2 சிக்சருடன் 22 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.

இறுதிகட்டத்தில் சென்னை அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைந்து போய் விட்டது. அல்பி மோர்கல் (2 ரன்), சுரேஷ் ரெய்னா (8 ரன்) அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆனார்கள். கடைசி பந்தில் வெய்ன் பிராவோ அடித்த சிக்சரின் உதவியுடன் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 44 ரன்களே எடுத்தது.

சென்னை தரப்பில் மொத்தம் 13 சிக்சரும், 7 பவுண்டரியும் விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஓவருக்கு 10.26 ரன்கள் வீதம் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பெங்களூர் அணி ஆடியது. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லும், அகர்வாலும் ஆட வந்தனர். அதே சமயம் முதல் ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை, சென்னை கேப்டன் டோனி அறிமுகம் செய்தார்.

டோனியின் திட்டத்திற்கு சூப்பர் பரிசு கிடைத்தது. அஸ்வினின் பந்து வீச்சில், அபாயகரமான பேட்ஸ்மேன் கெய்ல் (0) விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். பெங்களூர் அணிக்கு பல ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தவரான கெய்லை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருந்தது. அவர் ஆட்டம் இழந்ததும், அப்போதே பாதி நம்பிக்கை போய் விட்டது. இதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் சென்னை அணி, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி தந்தது.

அஸ்வினும், ஜகாதியும் பெங்களூர் பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தனர். மற்றொரு தொடக்க வீரர் அகர்வாலும் (10 ரன்) அஸ்வினுக்கு இரையானார். இதை தொடர்ந்து டிவில்லியர்ஸ் (18 ரன், 12 பந்து, 3 பவுண்டரி), விராட் கோக்லி (35 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரும் முதல் 10 ஓவருக்குள் வெளியேற பெங்களூர் அணியின் கனவு முற்றிலும் தகர்ந்து போனது. மளமள விக்கெட் சரிவால், இறுதிப்போட்டிக்குரிய பரபரப்பு இல்லாமல் ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

20 ஓவர்களில் பெங்களூர் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை அணியே கோப்பையை வென்றிருந்தது.

பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. அதே சமயம் பெங்களூர் அணி 2&அம்ப்;வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து வெறுங்கையுடன் திரும்புகிறது. ஏற்கனவே 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் டெக்கானிடம் கோப்பையை பறிகொடுத்திருந்தது.

எம்.எல்.ஏ.வாக கருணாநிதி, நாளை பதவி ஏற்கிறார்

தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். திருவாருர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி அன்றைய தினம் டெல்லியில் கனிமொழி எம்.பி.யை பார்க்க சென்றதால் அவரும் துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை.

அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் திருச்சிக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களும் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்கவில்லை.

கடந்த 27-ந்தேதி தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசன் முன்னிலையில் சிவபதி, மனோகரன் இருவரும் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் நாளை (திங்கட்கிழமை) எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்கிறார்கள். சபாநாயகர் அறையில் சபாநாயகர் ஜெயக்குமார் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இளம்பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். மீண்டும் செக்ஸ் புகாரில் சிக்கிய கேரள மந்திரி

கேரளாவில் கடந்த இடது முன்னணியின் ஆட்சியின் போது போக்கு வரத்து மந்திரியாக இருந்தவர் பி.ஜே. ஜோசப். இவர் 2007-ம் ஆண்டு சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் சென்ற போது முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த நடிகை லட்சுமி கோபக்குமாரை செக்ஸ் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து நடிகை லட்சுமி கோபக்குமார் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் பி.ஜே. ஜோசப் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணை சென்னை ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் மந்திரி பதவியை பி.ஜே. ஜோசப் ராஜினாமா செய்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது கேரள காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு கேரள காங்கிரஸ் எம்-வுடன் இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு காங்கிரஸ் மந்திரி சபையில் நீர் பாசன துறை மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பி.ஜே.ஜோசப் மீது தொடு புழா அருகே உள்ள ஆலங்கட்டி என்ற இடத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தொடுபுழா குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மந்திரி பி.ஜே.ஜோசப் தனது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் , தகாத வார்த்தைகளில் பேச முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்குக்கு சாட்சியாக பீரு மேடு எம்.எல்.ஏ. பிஜி மோள், தொடுபுழா பி.எஸ்.என்.எல். அதிகாரி ஆகியோரை சேர்த்துள்ளார். மனுவை விசாரித்த தொடுபுழா மாஜிஸ்திரேட்டு எம்.எல்.ஏ. மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரியை ஜூன் 4-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டார். ஏற்கனவே செக்ஸ் புகாரில் சிக்கி விடுதலையான மந்திரி பி.ஜே. ஜோசப் மீது மீண்டும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக இளம் பெண் தொடர்ந்துள்ள வழக்கால் அவருடைய பதவிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசு ஓரிரு நாளில் அதிரடி முடிவு?

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் (சென்னை) இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அண்ணா பல்கலைக்கழக கிளை துவங்கப்பட்டது.

இந்த திட்டத்தை பற்றி தற்போதைய அதிமுக அரசின் ஆலோசனைக் கூட்டத்தில், மற்ற இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கிளைகளை கலைத்துவிட்டு, மீண்டும் சென்னையில் மட்டும் இயக்குவதற்கான அரசாணையை பிறபிக்க போவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகலாம் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

நமது பிரதமர் சுத்தமானவர்: அன்னா ஹசாரே!!

பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.

அந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதா உருவாக்கும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை 50 சதவீதம் அளவுக்கு சேர்த்துக் கொள்ள மத்திய அரசு இறுதியாக இறங்கி வந்தது.

ஆனால், இன்னமும் அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை அந்த குழு எதிர் கொண்டு வருகிறது. நமது பிரதமர் சுத்தமானவர். நல்ல மனிதர். ஆனால், ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் பின்னணி சக்திகள் தான் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றார்.

ராஜபக்சேக்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும்!! வைகோ!

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என,

தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சென்னை சைதைப் பேட்டையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

அவர் செய்த போர்க்குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விரைவில் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

வெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி: குருபெயர்ச்சியால் திடீர் மாற்றம்

குருபெயர்ச்சி சாதகமில்லாமல் போனதால், மஞ்சள் நிறத்தில் இருந்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு கருணாநிதி மாறி வருகிறார். ஆரம்பம் முதல் கறுப்பு துண்டு அணிந்த கருணாநிதி, ஐந்தாண்டுகளுக்கு மேலாக மஞ்சள் துண்டுக்கு மாறினார். "கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது' என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.

"கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார்' என, ஆன்மிக பெரியோர் கூறி வந்தனர். முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மஞ்சள் துண்டை அவர் தவிர்த்தது இல்லை. தஞ்சாவூரில் இரண்டாண்டுகளுக்கு முன் மறைந்த அன்பில் பொய்யாமொழி குடும்ப திருமணம் நடந்த போது, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., கரை வேட்டியை தவிர்த்து, பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து வந்தார். அவ்விழாவில் பேசிய ஸ்டாலின், "அன்பில் பொய்யாமொழியின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதால், பட்டுக்கு மாறினேன்' என பேசினார். அடுத்து பேசிய கருணாநிதி, "நாம் திராவிட கொள்கையில் தோய்ந்தவர்கள். எக்காரணம் கொண்டும் நம் கரை, அடையாளங்களை மாற்றக் கூடாது' என, பட்டு வேட்டி, சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

சென்றாண்டு, செப்டம்பர் 25ம் தேதி, தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில், பெரிய கோவில் நந்தி மண்டபத்தில், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 நடனக் கலைஞர்கள் ஒரு சேர நடனமாடினர். இந்நிகழ்ச்சியை ரசிக்க வந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுத்துண்டு அணிந்து வந்தார். முன்னதாகவே, மேடைக்கு வந்துவிட்ட கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பத்தார் மற்றும் அமைச்சர்கள் ஓடி வந்து, கருணாநிதி பட்டாடை அணிந்து வந்ததை புகழ்ந்தனர். "தி.மு.க., படுதோல்வி, கனிமொழி கைது, ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் குழப்பம்' என, பல தோல்விகளுக்கு இடையே, கடந்த சில நாட்களாக, கருணாநிதி மஞ்சள் துண்டை தவிர்த்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு அணிந்து வருகிறார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னரும், கனிமொழி கைது செய்யப்பட்ட பின், டெல்லி பயணத்தின் போதும் கருணாநிதி வெள்ளைத்துண்டு அணிந்திருந்தார்.

இதுபற்றி ஜோதிடர்கள் சிலர் கூறியதாவது: மஞ்சள் துண்டு குருபலத்துக்காக அணிவது. மே 8ம் தேதி நடந்த குருபெயர்ச்சி கருணாநிதிக்கு சாதகமாக இல்லை. குரு பகவான், 12ல் உள்ளார். இந்த சூழலில் அவர் மஞ்சள் நிற துண்டு அணியாமல், வெள்ளை துண்டு அணிந்தால், அது அவருக்கு அமைதியை தரும். வெள்ளை நிறம் பொதுவாக சந்திரன், சூரியன், சுக்கிரன் ஆகிய ராசிகளுக்கானது. குருவின் பலவீனத்தை குறைத்து, அமைதி தரும் என்பதால் இம்மாற்றம் நடந்துள்ளது. அடுத்தாண்டு மே மாதம் நடக்கும் குருபெயர்ச்சி வரை, அவர் வெள்ளைத் துண்டு அணிந்து, அதற்கான பரிகாரத்தை அவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ மேற்கொண்டால், அவருக்கு மன அமைதி ஏற்படும். அதனால் தான் கருணாநிதி அடிக்கடி வெள்ளை துண்டுக்கு மாறி, மீண்டும் மஞ்சள் துண்டு அணிகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தங்கம் விலை பவுன் ரூ.17 ஆயிரத்தைத் தாண்டியது!

சென்னை: தங்கத்தின் விலை இன்று ஒரு பவுன் ரூ.17,000த்தைத் தாண்டியது.

அட்சய திருதியை முன்னிட்டு விலை ரூ.16,000த்தை எட்டிய தங்கம் விலை, நேற்று பவுன் ரூ.16,904த்தை எட்டியது.

இந் நிலையில் இன்று ஒரே நாளில் விலை ரூ. 104 அதிகரித்து ரூ.17,008 ஆனது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,126க்கு விற்றது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதாலும், இந்திய ரூபாய்க்கான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததாலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஊத்தங்கரை முரளிக்கு குறும்பட ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது !

ஊத்தங்கரை: சிறந்த குறும்பட ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த புனே திரைப்படக் கல்லூரி மாணவர் ஜி. முரளிக்கு கிடைத்துள்ளது.

கடந்த வருடத்திற்கான திரைப்பட, குறும்பட விருதுகள் கடந்த வியாழனன்று (மே 19) அறிவிக்கப்பட்டது. இதில் அருனிமா ஷர்மா இயக்கிய ஷயம் ராத் ஷெகர் என்ற குறும்படத்திற்குச் சிறந்த இயக்கம் மற்றும் ஒளிப்பதிவுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.

புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இக் குறும் படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றுள்ள ஜி. முரளி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர்கள் கே.சி. கோவிந்தராஜூம், சரோஜாவும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர்.

சிறந்த குறும்பட ஒளிப் பதிவாளருக்கான வெள்ளித்தாமரை விருதுடன் ரூ 50 ஆயிரம் பரிசுத் தொகை குடியரசுத் தலைவரால் முரளிக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் அவரை நியமித்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சையத் முனீர் ஹோடா பதவி விலகியதையடுத்து அய்யருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர் மதுரை, கரூர் மாவட்டக் கலெக்டராகவும் கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் தலைவராகவும் இருந்தவர் சோ. அய்யர். டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும் தாரக மந்திரத்தைக் கண்டுபிடித்துத் தந்த பெருமையும் இவரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்த முனீர் ஹோடா பின்னர் ஒதுக்கி வைக்கப்பட்டார். அவருக்கு திமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.

இப்போது ஆட்சி மாறிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையர் பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவைக் கொல்ல முயன்றதாக புகார்-அபாண்டமான குற்றச்சாட்டு என புலிகள் மறுப்பு

கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற கே.பியின் குற்றச்சாட்டு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009 மே மாதம் 18ம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகிறோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக் கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர் நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்சே அரசு செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத் தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகிறது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்சே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்து கொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித் திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன்.

இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரச படைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப் போவதுமில்லை.

அவ்வகையில் பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக் கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணை போகிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணை போகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நார்வே-நெடியவன் ஜாமீனில் விடுதலை:

இந் நிலையில் நார்வே நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரின் பேரில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸாரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், ஜூன் 1ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நல்லபடியா திரும்பி வருவேன்! ரஜினி உருக்கமான வாய்ஸ்!!

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக நேற்று (27ம்‌தேதி) இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தத்தில் இருந்த "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இதையடுத்து, உடல்நலம் தேறிய அவர், மீண்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பார்வையாளர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தனி வார்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை, அமெரிக்க நிபுணர்கள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ரஜினியின் நுரையீரலில் அழுத்தமாக படிந்துள்ள நீர்கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். ரஜினி இருந்த ஆம்புலன்ஸ் வேன், விமானம் வரை செல்ல முதல்வர் ஜெயலலிதா சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததால் விமானம் வரை ஆம்புலன்ஸ் சென்றது. பின்னர் ரஜினி மருத்துவ குழுவினரின் உதவியுடன் விமானத்தில் ஏற்றப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரஜினி சில வாரங்களுக்கு தங்கி சிகிச்சை எடுப்பார் என்றும், அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி வாய்ஸ் : முன்னதாக ரஜினியின் வாய்ஸ் அடங்கிய சிடி ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார். அதில் பேசிய ரஜினி, நான் உங்க ரஜினிகாந்த் பேசுறேன். நான் நல்லா இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்க. நான் பணம் வாங்குறேன். நடிக்குறேன். அதுக்கு நீங்க என் மேல இவ்ளோ அன்பு செலுத்துறீங்க. உங்களுடைய பிரார்த்தனை, அன்புக்கு கைமாறா என்ன செய்வேன்னு, செய்யப்போறேன்னு தெரியல. என் பேன்ஸ் எல்லாரும் கடவுள் ரூபத்தில் இருக்குறதா நினைக்கிறேன். உங்க பிரார்த்தனையால சிங்கப்பூர் போயிட்டு நான் சீக்கிரமே, நல்லபடியா திரும்ப வந்து உங்களையெல்லாம் சந்திக்குறேன். உங்க அன்பால தலைநிமிந்து நிற்பேன், என்று கூறியுள்ளார்.

லதா ரஜினி அறிக்கை : ரஜினியின் மனைவி லதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எனது கணவர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற தாங்கள் செய்து வரும் பூஜைகளுக்கும், கூட்டு பிரார்த்தனைகளுக்காக முதலில் நான் எனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் நலமுடன் உற்சாகமாகவும் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். அவரைப் பற்றி தேவையில்லாத செய்திகள் வந்து கொண்டிருப்பதை கண்டு தாங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறியுள்ளார்.

மருத்துவமனை அறிக்கை : ரஜினி உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினிகாந்த் கடந்த 13ம்தேதி மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு குடும்ப டாக்டர் மூலம் இசபெல்லா மருத்துவமனையில் 2 முறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேறி வருகிறார். நலமுடன் உள்ளார். அவரே உணவருந்துகிறார். குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கிறார். அவர் சூழ்நிலை மாற்றத்துக்காகவும், ஓய்வுக்காகவும் அதே நேரம் குறிப்பிட்ட பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!

நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிட்டு, கதை விவாமும் நடந்தேறியது. இந்நிலையில் திடீரென செல்வா அப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இயக்குனர் பொறுப்பேற்ற கமல்ஹாசன், படக்குழுவினரோடு லண்டன் புறப்பட்டு விட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டபோதிலும், ஏன் இந்த திடீர் லடாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது.

ஆரம்பத்தில் ஒரு வரி கதையைத்தான் ‌கமலிடம், செல்வா சொல்லியிருக்கிறார். அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்திருந்ததால், அடுத்த முறை சந்‌திக்கும்போது நிறைய பேசலாம் என்று கூறி செல்வாவை அனுப்பி வைத்திருக்கிறாம் கமல். அடுத்த சந்திப்பின்போது, செல்வா சொன்ன கதையை விட, நிறைய தகவல்களுடன் அற்புதமான கதை‌யை சொல்லியிருக்கிறார் கமல். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சொல்லப்பட்ட அந்த கதையை சேகரிப்பதற்கு ஒருவாரகாலம் இணையம், நூலகம் என பலமணி நேரம் செலவிட்டிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் செல்வாவோ... கொஞ்சம் பிஸியா இருந்ததால் முழுசா கதையை டெவலப் பண்ண முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆரம்பித்த முட்டலும், மோதலும் கவுதமி மேட்டரில், படத்தை விட்டே நீக்கும் அளவுக்கு போய் விட்டது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அதென்ன கவுதமி மேட்டர்...? கதை விவாதம் நடந்‌தபோது கவுதமியும் வந்து உட்கார்ந்து கொள்வாராம். விஸ்வரூபம் படத்திற்கு காஸ்ட்யூமராக நானே வேலை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட செல்வா, கதை விவாதத்தின்‌போது கவுதமி பங்கேற்பதையோ, அவர் சொல்லும் கருத்துக்களையோ, சீன்களையோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம். அதோடு கவுதமியின் கருத்துக்கள் எல்லாமே கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்தவையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார் செல்வா. கவுதமியை சந்தேகப்பட்ட காரணத்தினாலும் விஸ்வரூபத்தில் இருந்து செல்வா நீக்கப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற செய்தியும் கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது.

எப்படியோ மூலக்கரு கொடுத்த செல்வாவுக்கு பட்டை நாமம் போட்ட சூட்டோடு விஸ்வரூபம் விஸ்வரூபமாக உருவாக ஆரம்பித்து விட்டது.

அழகுச் சிலை கரீனாவுக்கு லண்டனில் மெழுகுச் சிலை

மும்பை: லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை வைக்கப்பட உள்ளது.

பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் கரீனா கபூர். பெரிய படமா, கூப்பிடு கரீனாவ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். நடிக்க வந்த புதிதில் கொளுக், மொழுக் என்றிருந்த கரீனா தற்போது சைஸ் ஜீரோவாக உள்ளார்.

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் தங்கள் கனவுக் கன்னி கரீனா கபூரின் மெழுகுச் சிலையை வைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பட்டாளம் வேண்டுகோள் விடுத்தது. இதையேற்று தற்போது கரீனாவுக்கு மெழுகுச்சிலை வைக்கப்படவுள்ளது.

கரீனா, ஆமிர் கானுடன் புதுவையில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அது முடிந்தவுடன் இங்கிலாந்து சென்று இது குறித்து அதிகாரிகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மேடம் டுசாட்ஸில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன் மெழுகுச் சிலைகள் உள்ளன. இந்த வரிசையில் இப்பொழுது கரீனாவும் சேர்ந்துள்ளார்.

நடிகை ஹேமமாலினி வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது

மும்பை: அருகே மலத் என்ற இடத்தில் ஹேமமாலினியின் பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்குள் இன்று ஒரு சிறுத்தை புகுந்து விட்டது. இதையடுத்து வனத்துறைக்குத் தகவல் போனது.

தற்போது வனத்துறை ஊழியர்கள் குழு ஹேமமாலினியின் பங்களாவுக்கு விரைந்துள்ளது. சிறுத்தை புகுந்த வீட்டில் தற்போது ஹேமமாலினி இல்லை.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில வனத்துறை அமைச்சர் பதங்கராவ் கதம் கூறுகையில், இதுகுறித்து வனத்துறையினரிடம் விவரம் கோரியுள்ளேன். எப்படி அங்கு சிறுத்தை வந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

ஹேமமாலினியின் வீட்டுக்குள் சிறுத்தை புகுந்த செய்தி மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக ஒத்துழைக்கும்-ஸ்டாலின்

சென்னை: ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.சஸ்டாலின் கூறினார்.

சபாநாயகர் ஜெயக்குமாரைப் பாராட்டி இன்று சட்டசபையில் ஸ்டாலின் பேசுகையில்,

சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள்.

எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க் கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

5 விரல்கள் இருந்தாலும் அவை ஒன்று சேர்ந்தால் தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்த பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் எத்தனையோ சபாநாயகர்கள் இருந்து இருக்கிறார்கள். என்றாலும் கிருஷ்ணாராவ், புலவர் கோவிந்தன், சி.பா.ஆதித்தனார், பழனிவேல் ராஜன் ஆகியோர் வரலாறு படைத்தனர். அதுபோல் நீங்களும் சிறப்பாக இடம்பெற வேண்டும்.

ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்

சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

இன்று சென்னையில் மோதல்-பெங்களூரை வென்று பைனலுக்குள் நுழையுமா மும்பை?

சென்னை: ஐபிஎல் 2வது குவாலிபயர் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று சென்னையில் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் வெல்லும் அணியே இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும் வாய்ப்பைப் பெறும்.

முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை அணி, பெங்களூரை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. 2வது பிளே ஆப் போட்டியில் மும்பை அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது.

இதையடுத்து இன்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2வது அணியைத் தேர்வு செய்யும் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் தோற்ற பெங்களூரும், 2வது பிளே ஆப் போட்டியில் வென்ற மும்பையும் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் மும்பை வென்றால்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். அதேசமயம், இறுதிப் போட்டிக்கான இன்னொரு வாய்ப்பைப் பெற்றுள்ள பெங்களூர் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆர்வமாக உள்ளது.

மும்பை அணியைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கிரன் போலார்ட் ஆகியோர் வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொடுக்கும் வகையில் உள்ளனர்.

மேலும் ஜேம்ஸ் பிராங்க்ளினும் சிறப்பான பேட்டிங்கை, குறிப்பாக நெருக்கடியான நேரத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக வலம் வரும் லசித் மலிங்கா கை கொடுப்பார். கூடவே முனாப் படேலும், ஹர்பஜன் சிங்கும் நல்ல பார்மில் உள்ளதால் மும்பைக்கு பலம்தான்.

பெங்களூரைப் பொறுத்தவரை கிறிஸ் கெய்லின் சூறாவளியில் அந்த அணி ஆரம்பத்திலிருந்தே உயரப் பறந்து வந்தது. ஆனால் சென்னைக்கு எதிரான பிளே ஆப் போட்டியில் கெய்லை சென்னை வீரர்கள் அடக்கி ஒடுக்கி விட்டதால் அந்த அணியால் எழ முடியாமல் போய் விட்டது.

10 போட்டிகளில் ஆடி 519 ரன்களைக் குவித்து அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக திகழ்கிறார் கெய்ல்.

அதேபோல விராத் கோலி, ஏப் டிவில்லியர்ஸ், மயங்க் அகர்வால் ஆகியோரும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் லியூக் போமர்ஸ்பாக் ஆட்டமும் கவனிப்புக்குரியதே.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகிர்கான், கேப்டன் டேணியல் வெட்டோரி ஆகியோரே பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். ஸ்ரீநாத் அரவிந்த் கை கொடுக்கலாம்.

இரு அணிகளிலும் சில பலவீனங்கள், நிறைய பலங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து சரியான முறையில் விளையாடும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சபாநாயகராக ஜெயக்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகராக ஜெயக்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக சட்டசபையின் சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் ப.தனபாலும் மனு செய்திருந்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் மனு செய்யவில்லை. இதையடுத்து இருவரும் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று காலை சபை கூடியதும் அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் இணைந்து ஜெயக்குமாரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

பின்னர் பேசிய சபாநாயகர் ஜெயக்குமார் தன்னை சபாநாயகராக தேர்வு செய்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், சட்டசபையின் மாண்பு, மரபை சீர்குலைக்காமல் கண்ணியத்துடன் செயல்படுவேன். கட்சி பாகுபாடின்றி செயல்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெறுவேன்.

சட்டசபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு உரிய வாய்ப்பளிப்பேன் என்றார்.

பின்னர் புதிய சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜதயகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினர்.

முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் ஆளுங்கட்சி செயல்படும். ஜனநாயகம் தழைக்க துணையாக இருப்போம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பேரவையின் மரபுகளைக் காப்பாற்றும் வகையில் சபாநாயகர் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

சபாநாயகர் ஜெயக்குமார் அனைத்து உறுப்பினர்களின் மனநிலையை அறிந்த சிறந்த அனுபவம் பெற்றவர். ஒரு தேருக்கு அச்சாணி போன்று எதிர்க்கட்சி விளங்குகிறது.

சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

5 விரல்களும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அவை இணைந்து ஒன்றுகூடினால்தான் ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றார் ஸ்டாலின்.

சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை தேமுதிக தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அதிமுகவுக்கு அடுத்த இடத்தை தேமுதிக பெற்றுள்ளதாலும், அக்கட்சியின் சட்டசபை கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாலும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

சட்டசபை கட்சித் துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், இன்று புதிய சபாநாயகர் ஜெயக்குமாரை, அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியை தொடங்கினார்.

வெற்றியை எதிர்பார்த்தது தான்: மாணவி நித்யா

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 மாணவிகள் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா கூறுகையில்,

இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்ததாக கூறினார். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை என்று கூறிய அவர், டாக்டராவதே விருப்பம் என்று தெரிவித்தார்.


இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்.

உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!

ஆறடி உயர அல்வாத்துண்டு என வர்ணிக்கப்படும் அனுஷ்காவை உரசிப்பார்த்த ரசிகர்களால் சூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ரெண்டு படம் மூலம் அறிமுகமாகி, அருந்ததீ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுஷ்கா. இவர் சமீபத்தில் வெளிப்புற படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க சென்றார். தங்கச் சிலைபோல தகதகத்த அனுஷ்காவிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடி விட்டனர். ஆட்டோகிராப் கேட்டு அவரை ‌நெருங்கிய ரசிகர்கள் சிலர் கதகதப்புக்கா அனுஷ்காவை உரசியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அனுஷ்கா, வாய்க்கு வந்தபடி ரசிகர்களை திட்டித் தீர்த்து விட்டாராம்.

இதையடுத்து அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு அனுஷ்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் தெரியாமல் இடித்த ரசிகரை இப்படி திட்டியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், என்று அவர்கள் கூறியதுடன், மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது, என்று கூச்சல் போட ஆரம்பித்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அனுஷ்கா சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மூன்று மொழிகளில் அர்ஜூன் நடிக்கும் காட்டுபுலி!

கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து உருவாகும் படம் "காட்டுபுலி". இப்படத்தை கத்தார், வீர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்திபடங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய டினு வர்மா முதன்முறையாக அர்ஜூனை வைத்து இப்படத்தை இயக்குகிறார்.

உடற்பயிற்சி கூடம் ஒன்றில் அர்ஜூனை முதன்முதலாக சந்தித்த டினு வர்மா, அர்ஜூனின் ஒர்க்கிங் ஸ்டைலை பார்த்து பிடித்துபோய் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டுபகுதியில் த்ரில்லர் நிறைந்த படமாக காட்டுபுலி படத்தை இயக்கி வருகின்றனர். ரஜினீஷ் - சாயாலி பகத், அமீத் - ஹனாயா, ஜஹான்-ஜெனிபர் ஆகிய மூன்று ஜோடிகள் காட்டுக்குள் ஒரு ட்ரிப் போகிறார்கள். அங்கே ஒரு முக்கியமான நெருக்கடியில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்போது அர்ஜூன் - பிரியங்கா தேசாய் ஜோடியையும் அவர்களின் மகள் தன்யாவையும் சந்திக்கிறார்கள். காட்டுபகுதியில் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியிலிருந்து அர்ஜுன் எப்படி அவர்களை காப்பாற்றிக் கொண்டுவருகிறார் என்பது கதை.

தலைக்கோணம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தங்கியிருந்து இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள். ராட்சத பல்லி, சிறுத்தைப் புலி, அட்டை, விஷப் பாம்புகள் என காட்டின் அத்தனை கொடிய விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து இந்தப் படத்தை படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் 50 குதிரைகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் குதிரைகளைத் தேடி சிறுத்தைப் புலிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இவற்றிடமிருந்து பாதுகாக்க ஏராளமான காவலர்களை நியமித்து குதிரைகளைப் பார்த்துக் கொண்டார்கள் காட்டுப் புலி குழுவினர்.

அர்ஜூனுக்கு மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படங்களில் இந்த காட்டுபுலி படமும் நிச்சயம் சேரும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் காட்டுபுலி குழுவினர்.

கடற்கொள்ளையை தடுக்க இந்தியா தயார்: மன்மோகன்

அடிஸ் அபாபா : சோமாலிய கடல் பகுதியில் நடக்கும் கடல் கொள்ளையை, ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து தடுக்க இந்தியா தயாராக உள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், எத்தியோபியா மற்றும் தான்சானியா நாடுகளுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ளார். முதல் கட்டமாக, எத்தியோபியாவின் அடிஸ் அபாபா நகரில் நடந்த இந்திய - ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

எத்தியோபிய பார்லிமென்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவும், ஆப்ரிக்காவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தவை. இந்திய பெருங்கடல் நமது நாடுகளை பிரித்து விட்டது. இந்திய கலாசாரத்துக்கும், ஆப்ரிக்க நாட்டு மக்களுக்கிடையேயும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எத்தியோபியாவில் அணியப்படும் தலைப்பாகைக்கும் இந்தியர்களின் தலைப்பாகைக்கும் நிறைய ஒற்றுமை காணப்படுகிறது. தென்னிந்தியர்களின் உணவான தோசைக்கும், எத்தியோபியாவின் "இன்ஜாரா' என்ற உணவுக்கும் ஒற்றுமை உள்ளது. எத்தியோபியாவின் அடுலிஸ் நகரம் முன்பொரு காலத்தில் பட்டு, தந்தம், தங்கம் மற்றும் நறுமண உணவுப் பொருட்களின் சந்தையாக இருந்துள்ளது. வியாபார நிமித்தமாக இந்த நகருக்கு வந்த இந்தியர்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள முருட் ஜன்ஜிரா என்ற கோட்டை, ஆப்ரிக்க சின்னங்களை பிரதிபலிப்பவையாக உள்ளது.

மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் புரட்சியும், கிளர்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஆப்ரிக்க கூட்டமைப்பு நாடுகள் தங்கள் பகுதியில் அமைதியையும், ஸ்திர தன்மையையும் ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்கை நிர்ணயிப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. சர்வதேச நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், ஐ.நா., வரையறை செய்துள்ள தீர்மானத்துக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையை தடுக்க ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து செயலாற்ற இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

வடக்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு கூடுதலாக ரூ.140 கோடி ஒதுக்கீடு : மம்தா அறிவிப்பு

கோல்கட்டா : "மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி, வளர்ச்சி திட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, அந்த பகுதியின் வளர்ச்சிக்கு, மாநில அரசு முன்னுரிமை அளிக்கும். அந்த பகுதிக்கு, கூடுதலாக 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என, முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்துக்கு பின், மம்தா கூறியதாவது: மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்கள், மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட, வளர்ச்சி பணிகளில் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்த ஆறு மாவட்டகளிலும், முழு அளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தான், அரசின் நோக்கம். இந்த ஆறு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வடக்கு பகுதிக்கு, தற்போது ஆண்டுக்கு 60 கோடி ரூபாய், வளர்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பகுதியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு, இந்த நிதி போதுமானது அல்ல. எனவே, இனிமேல், ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தற்போதுள்ள நிலையில், மேற்கு வங்க மாநில அரசு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆனாலும், வளர்ச்சி பணிகளை செயல்படுத்தும் விஷயத்தில், சிக்கனம் காட்ட முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
இது குறித்து மேற்கு வங்க மாநில அரசு வட்டாரங்கள் கூறுகையில், "மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில், மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். எனவே, இந்த மாவட்டங்களில் நடக்கவுள்ள வளர்ச்சி திட்டங்களை, நேரடியாக கண்காணிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்' என்றன.
இது குறித்து காங்கிரசை சேர்ந்த ஜல்பய்குரி தொகுதி எம்.எல்.ஏ., தேவபிரசாத் ராய் கூறுகையில், "கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதன் மூலம், வடக்கு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது' என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்பாரா?

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

முக நூல்

Popular Posts