background img

புதிய வரவு

ரஜினி அறிக்கை வெளியிடுவார்: தனுஷ்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13ந் தேதி, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மருமகன் நடிகர் தனுஷ்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருக்கு நுரையீரலில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். ரசிகர்கள் பதற்றப்பட தேவையில்லை.

ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள். அவருக்கு தனிமையும், ஓய்வும் தேவைப்படுகிறது. அதற்காகவே ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா போவதாக வந்த வதந்தியை நம்ப வேண்டாம். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார். வீடு திரும்பியதும் அவரே அறிக்கை வெளியிடுவார்.

அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts