background img

புதிய வரவு

செல்வராகவன் படத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியா மறுப்பு

“பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்” படத்திலும் நடித்தார். இப்படத்தில் நடித்தபோது ஆண்ட்ரியாவுக்கும் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

இதுவே செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்பட்டது. பின்னர் செல்வராகவன் “இரண்டாம் உலகம்” படத்திலும் ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன் படப்பிடிப்பிலும் பங்கேற்று சில காட்சிகளில் நடித்தார். இந்த நிலையில் செல்வராகவன்- கீதாஞ்சலி திருமணம் நடந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் “இரண்டாம் உலகம்” படப்பிடிப்பை செல்வராகவன் மீண்டும் துவக்கி உள்ளார்.

இதில் நடிக்க ஆண்ட்ரியாவை அழைத்தபோது மறுத்து விட்டார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts