background img

புதிய வரவு

சென்னையில் தனியாக இருந்த 2 வயதான பெண்கள் கொடூரக் கொலை

சென்னை: சென்னையில் வீட்டில் தனியாக வசித்து வந்த சகோதரிகளான இரு வயதான பெண்கள் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு மாம்பலம், கோதண்டராமர் தெருவில் வசித்து வந்தவர்கள் ஜெயலட்சுமி மற்றும் காமாட்சி. இவர்களில் அக்காவான ஜெயலட்சுமிக்கு வயது 75. இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். கணவரைப் பிரிந்து தங்கையுடன் வசித்து வந்தார். தங்கையான காமாட்சிக்கு வயது 72. இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே வசித்து வந்தனர். வீட்டுக்கு பெரிய அளவில் யாரும் வருவதில்லை.

காமாட்சி அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அதிலிருந்து வந்த பென்ஷன் பணத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர். நேற்று காலை முதல் வீட்டில் ஆள் நடமாட்டம் தெரியவில்லை. பிற்பகல்வாக்கில் வீட்டு வேலை செய்ய வரும் கன்னியம்மாள் வந்து கதவைத் தட்டியபோது அது திறந்து கொண்டது.

இதனால் உள்ளே சென்று பார்த்த கன்னியம்மாள் அங்கு காமாட்சியும், ஜெயலட்சுமியும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். மோப்ப் நாய்ப் படையும் வரவழைக்கப்பட்டது. இருவரையும் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். ஜெயலட்சுமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை கழுத்தை நெறித்து முதலில் கொன்றுள்ளதாக தெரிகிறது. காமாட்சியின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது.

இருவரையும் கொலை செய்த கும்பல் அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தை தெரிந்தவர்கள் யாரேனும்தான் நடத்தியிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில காலமாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்து ஒரு கும்பல் தொடர் கொலையில் ஈடுபட்டு வந்து சென்னையை நடுங்க வைத்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை நீடித்த அந்தக் கொலைகளில் ஒரு தேக்க நிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பது சென்னை நகர மக்களை அதிர வைத்துள்ளது. குறிப்பாக இதே மேற்கு மாம்பலம் பகுதியில் ஒரு பாட்டு டீச்சர், ஒரு வயதான தம்பதி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts