background img

புதிய வரவு

பதிலடி கொடுக்குமா சென்னை கிங்ஸ்! * இன்று கொச்சி அணியுடன் மோதல்

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் கொச்சி அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை எதிர்கொள்கிறது.
சென்னை அணி, இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை அடையலாம். கடைசியாக ராஜஸ்தான், டில்லி அணிகளை வீழ்த்தி "சூப்பர் பார்மில்' உள்ள சென்னை அணி, இன்று கொச்சியை சமாளிக்கும் பட்சத்தில், இரண்டாவது முறையாக "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம். இதன்மூலம் சமீபத்தில் கொச்சி அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கலாம்.
பலமான பேட்டிங்:
சென்னை அணியின் பேட்டிங் பலமாக காட்சி அளிக்கிறது. துவக்க வீரர் முரளி விஜய் எழுச்சி கண்டது பேட்டிங் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை பத்து போட்டிகளில் 393 ரன்கள் எடுத்துள்ள மைக்கேல் ஹசி, இன்றும் தனது ரன் வேட்டையை தொடரலாம். "சூப்பர் பார்மில்' உள்ள சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, ஆல்பி மார்கல் உள்ளிட்டோர் அதிரடியாக ரன் குவிக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்து சுலப வெற்றி பெறலாம். "மிடில்-ஆர்டரில்' பத்ரிநாத் நம்பிக்கை தருகிறார்.
போலிஞ்சர் எழுச்சி:
சென்னை அணியின் மிகப்பெரிய பலம் சுழற்பந்துவீச்சு. இதுவரை 14 விக்கெட் வீழ்த்தியுள்ள அஷ்வின், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருடன் ஜகாதி, ரெய்னா, ரந்திவ் உள்ளிட்டோர் சுழலில் அசத்தி வருவது கூடுதல் பலம் சேர்க்கிறது. இதுவரை தலா 14 விக்கெட் கைப்பற்றி, "சூப்பர் பார்மில்' உள்ள ஆல்பி மார்கல், போலிஞ்சர் உள்ளிட்டோர் வேகத்தில் அசத்தலாம்.
ஆறுதல் வெற்றி:
கொச்சி அணி, இதுவரை 13 போட்டிகளில் 6ல் மட்டுமே வெற்றி கண்டது. இன்று தனது கடைசி போட்டியில், பலமான சென்னை அணியை சந்திக்கவுள்ள கொச்சி அணி, வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பார்த்திவ் கேப்டன்:
கொச்சி அணி கேப்டன் ஜெயவர்தனா, டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல இருப்பதால், இன்றைய போட்டியில் விளையாடமாட்டார். இதனால் கேப்டன் பொறுப்பு, பார்த்திவ் படேலு<க்கு வழங்கப்படலாம். ராஜஸ்தான் அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரண்டன் மெக்கலம் இன்றும் கைகொடுக்கலாம். "மிடில்-ஆர்டரில்' பார்த்திவ் படேல், ரவிந்திர ஜடேஜா, பிராட் ஹாட்ஜ் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
பலமான வேகம்:
கொச்சி அணியில் ஆர்.பி. சிங், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட அனுபவ வேகங்களுடன் இணைந்து வினய் குமார், பரமேஸ்வரன் உள்ளிட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சுழலில் சிறப்பாக செயல்பட்டு வரும் கோமஸ், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பு தந்தால் நல்லது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக "ஆல்-ரவுண்டராக' அசத்திய பிராட் ஹாட்ஜ் இன்றும் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.
---
உள்ளூரில் அசத்தல்
சென்னை அணி, தனது சொந்த ஊரான சென்னையில் இதுவரை விளையாடிய ஆறு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. இன்று கொச்சி அணியை வீழ்த்தும் பட்சத்தில், "உள்ளூரில் கிங்ஸ்' என்ற பெருமையை நிலைநாட்டலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts