background img

புதிய வரவு

2ஜி: தேசிய பாதுகாப்பு கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்கவில்லை-சாமி

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தேசிய பாதுகாப்பும் அபாயத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால், இந்தக் கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்கவே இல்லை என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி புகார் கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சாமி தொடர்ந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஒ.பி. சைனி முன்னிலையில் இன்று நடந்தது.

அப்போது சுப்பிரமணிய சாமி ஆஜராகி வாதாடுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விகாரம் தொடர்பாக நான் கொடுத்த புகாரில் தேசிய பாதுகாப்பு குறித்த பல்வேறு அம்சங்களை தெரிவித்திருந்தேன். ஆனால், அது குறித்து சிபிஐ விசாரிக்கவே இல்லை.

மேலும் எனது புகாரை சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையுடன் இணைக்கவில்லை. எனவே எனது புகாரை தனியாக விசாரிக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசு வழக்கறிஞரான என்னை நியமிக்க வேண்டும், அதற்கு எனக்கு முழு உரிமை உண்டு என்றார்.

அரசு வழக்கறிஞராக சாமியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஆகஸ்டு 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts