சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து. வடிவேலு அண்ட் கோ காமெடி கூட்டணியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சிங்கமுத்து. சொத்து தகராறு காரணமாக வடிவேலு - சிங்கமுத்து இடையே மோதல் வெடித்து, கோர்ட் - கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு களமிறங்கியதால், அவருக்கு போட்டியாக அவரது அந்தரங்க விஷயங்கள் எல்லாமும் தெரிந்த சிங்கமுத்து களமிறக்கப்பட்டார். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பேச... வடிவேலுக்கு எதிராக சிங்கமுத்து பேசினார். வடிவேலுவின் பிரசாரத்துக்கு கிடைத்த அளவு சிங்கமுத்து பிரசாரத்துக்கு ஆதரவு இல்லையென்றாலும்... ஜெயித்தது என்னவோ சிங்கமுத்து பிரசாரம் செய்த அதிமுகதான்.
அதனால்தான் இப்போது சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் சிங்கமுத்து. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக போயஸ் கார்டன் சென்ற சிங்கமுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும்போது, இந்த வெற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், மக்களை பார்த்தபோது, அவர்களின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. பெரிய மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அதனால், வெளியில் சொல்ல பயந்து கொண்டே, இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். இனி மக்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் நடக்கும், என்றார்.
வடிவேலு பிரசாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று வடிவேலு எங்கேயும் பிரசாரம் செய்யவில்லையே. எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக்காட்டி ஓட்டு கேட்டு விட்டு, எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சிக்கு ஓட்டு போடாதே என்றார். அவரது பிரசாரம் காமெடியில் முடிந்துவிட்டது, என்றார்.

0 comments :
Post a Comment