background img

புதிய வரவு

பணம் கொடுத்து ஜெயிக்கும் கலாசாரத்திற்கு முடிவு : விஜயகாந்த் பேட்டி

சென்னை : ""பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.,வின் திட்டம் மக்களால் முறியடிக்கப்பட்டு விட்டது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த், நேற்று பகல் 12:30 மணிக்கு வந்தார். அவருக்கு லட்டு ஊட்டி தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: இது எனக்கு கிடைத்த வெற்றியல்ல; மக்களுக்கும், என கட்சி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. எங்கள் கட்சியின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 8.33 சதவீத ஓட்டுகள் பெற்றோம். 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 10.31 சதவீத ஓட்டுகள் பெற்றோம். விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, குடும்ப அராஜகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர்.

தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வியில், தி.மு.க., மற்றும் கருணாநிதி குடும்பத்திற்கு பங்கு உண்டு. அண்ணாதுரை கட்சியை தனது குடும்பமாக பார்த்தார். ஆனால், கருணாநிதி குடும்பத்தை கட்சியாக மாற்றியுள்ளார். குறிப்பாக பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.,வின் திட்டம், மக்களால் முறியடிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,வின் அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்ததற்கு, கட்சியின் அராஜக நிலையே காரணம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் இனி பல திருப்பங்கள் நடக்கும். வழக்கு கோர்ட்டில் உள்ளதால் அதை பற்றி அதிகம் பேச முடியாது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts