சென்னை: “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று தெரிவித்த அவர், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
கைதையடுத்து அவருடைய மனநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக டில்லி செல்லும் எண்ணம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment