நேற்று மாலை நிலவரப்படி, 14 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் தான், பெரும்பாலும் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (மனிதநேய மக்கள் கட்சி), குன்னூர் (இந்திய கம்யூ.,), திருச்சுழி (அகில இந்திய மூவேந்தர் முன்னணி), பத்மநாபபுரம் (தே.மு.தி.க.,), பாளையங்கோட்டை (மார்க்சிஸ்ட்), கம்பம் (தே.மு.தி.க.,), திருவாடானை (தே.மு.தி.க.,) ஆகிய ஏழு தொகுதிகள், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல, அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளையே தி.மு.க., கைப்பற்றி உள்ளது.
0 comments :
Post a Comment