தேவையான பொருள்கள்:
முட்டை - 2
காலிஃபிளவர் - 1 (400 கிராம்)
வெங்காயம் - 2 (100 கிராம்)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
காலிஃபிளவரை நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
அத்துடன் மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி, சிறிது மஞ்சள் தூளைப் போட்டு கரண்டியால் நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்க்கவும்.
சிவந்து மணம் வந்தவுடன், முட்டையை ஊற்றி கரண்டியால் நன்றாக அடித்து, தூள் தூளாகச் செய்து கிளறவும்.
5 நிமிடங்கள் கிளறிய பின் வேகவைத்துள்ள காலிபிளவரைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சுண்டிய பின், நன்றாகக் கிளறி வாணலியை இறக்கிவிடவும்.

0 comments :
Post a Comment