background img

புதிய வரவு

தொடரும் பாலியல் புகார்கள்: ஐஎம்எப் தலைவர் ஸ்ட்ராஸ் கான் ராஜினாமா

நியூயார்க்: பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து பன்னாட்டு ஐஎம்எப் தலைமைப் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ்கான் ராஜானாமா செய்துள்ளார்.

ஐ.எம்.எப்., தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான், சமீப்தில் நியூயார்க் ஹோட்டல் ஒன்றின் 32 வயது பெண் பணியாளரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அந்தப் பெண் புகார் கொடுத்தார்.

இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நியூயார்க் நகரம் அருகில் உள்ள, ரைக்கர்ஸ் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டதால் அவர் தனது பணியை செய்ய முடியாத நிலையில் இருந்தார். மேலும் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார்.

அதனால், இடைக்கால தலைவர் ஒருவரை ஐ.எம்.எப்., நிர்வாகக் குழு நியமிக்க வேண்டும்' என்று, அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் ஸ்ட்ராஸ் கான் மீது மேலும் சில பாலியல் புகார்கள் எழுந்தன. நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு விபச்சார விடுதியை நடத்தும் 35 வயதுப் பெண் கிர்ஸ்டன் டேவிஸ், தான் 2006-ம் ஆண்டு ஸ்ட்ராஸ்கானுக்கு பெண்களை சப்ளை செய்ததாகவும், இரண்டரை மணி நேரத்துக்கு கட்டணமாக 2500 டாலர் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

தான் அனுப்பிய பெண்களிடம் அவர் பலாத்காரமாக நடந்து கொள்ளாமல், பக்குவமாக நடந்து கொண்டதாக டேவிஸ் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு நடந்த போது, ஸ்ட்ராஸ் கான் ஐஎம்எப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read: In English
ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர் எந்த அளவு வீக் என்பதைக் காட்ட இந்த புதிய குற்றச்சாட்டு உதவியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தனது ஐஎம்எப் தலைமைப் பதவியை ஸ்ட்ராஸ் கான் ராஜினாமா செய்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts