background img

புதிய வரவு

ஜாகிர் கானுக்கு விருது

புதுடில்லி: "உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஜாகிர் கானுக்கு, அர்ஜுனா விருது வழங்கவேண்டும்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். கடந்த சில ஆண்டுகளாக பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், சமீபத்திய உலக கோப்பை தொடரில், 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இவருக்கு விளையாட்டு பிரிவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்க, பி.சி.சி.சி., மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன் இவ்விருதை முன்னாள் வீரர்கள் சலீம் துரானி, மன்சூர் அலி கான் பட்டோடி, விஜய் மஞ்ச்ரேக்கர், தற்போதைய சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், சச்சின் போன்ற வீரர்கள் பெற்றுள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts