background img

புதிய வரவு

கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி! * புனே அணி பரிதாபம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான் "ஆல்-ரவுண்டராக' அசத்த, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொண்டது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 65வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. புனே அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. கோல்கட்டா அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. "டாஸ்' வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சுழல் ஜாலம்:
புனே அணி துவக்கத்திலேயே திணறியது. யூசுப் பதான் சுழலில் ஜெசி ரைடர்(1) காலியானார். அப்துல்லா பந்தில் மனிஷ் பாண்டே(16) வெளியேறினார். பெர்குசன்(16) தாக்குப்பிடிக்கவில்லை. இதையடுத்து 3 விக்கெட்டுக்கு 44 ரன்கள் மட்டும் தத்தளித்தது. பின் கங்குலி, உத்தப்பா இணைந்து அணியை காக்க முயன்றனர். தன்னை புறக்கணித்த கோல்கட்டா அணிக்கு கங்குலி சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப அப்துல்லா பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். இம்மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. சாகிப் பந்தில் கங்குலி(18) பரிதாபமாக அவுட்டானார். யூசுப் பதான் வலையில் உத்தப்பாவும்(12) சிக்க, நிலைமை மோசமானது.
யுவராஜ் மந்தம்:
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய அறிமுக வீரர் சச்சின் ராணா, காலிஸ் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். மறுமுனையில் போராடிய கேப்டன் யுவராஜ், ஒரு நாள் போட்டி போல மந்தமாக ஆடியதால், ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. பாலாஜி வீசிய கடைசி ஓவரில் யுவராஜ்(24), ராணா(18) அவுட்டாகினர். புனே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது.
காம்பிர் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி. தாமஸ் வேகத்தில் கோஸ்வாமி(6) வீழ்ந்தார். பின் கேப்டன் காம்பிர், மனோஜ் திவாரி இணைந்து அசத்தினர். தாமஸ் பந்தில் திவாரி சிக்சர் அடித்தார்.பார்னல் ஓவரில் காம்பிர் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். புவனேஸ்வர் வேகத்தில் திவாரி(24) போல்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் அதிரடியாக ஆடினார். ராகுல் சர்மா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து புவனேஸ்வர் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மறுபக்கம் பவுண்டரிகளாக பறக்க விட்ட காம்பிர், அரைசதம் கடந்தார். பார்னல் பந்தில் கங்குலியின் சூப்பர் "கேட்ச்சில்' யூசுப்(29) அவுட்டானார். கோல்கட்டா அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. காம்பிர் (54), பாட்டியா(1)அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் வென்றார்.





ஸ்கோர் போர்டு
புனே வாரியர்ஸ்
ரைடர்(கே)திவாரி(ப)யூசுப் 1(6)
பாண்டே எல்.பி.டபிள்யு.,(ப)அப்துல்லா 16(12)
பெர்குசன்(ஸ்டம்)கோஸ்வாமி(ப)சாகிப் 16(19)
கங்குலி(கே)யூசுப்(ப)சாகிப் 18(22)
உத்தப்பா(கே)பிரட் லீ(ப)யூசுப் 12(19)
யுவராஜ்(கே)கோஸ்வாமி(ப)பாலாஜி 24(26)
ராணா(ப)பாலாஜி 18(16)
பார்னல்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 12
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 118
விக்கெட் வீழ்ச்சி: 1-9(ரைடர்), 2-17(பாண்டே), 3-44(பெர்குசன்), 4-71(கங்குலி), 5-79(உத்தப்பா), 6-113(யுவராஜ்), 7-118(ராணா).
பந்துவீச்சு: பிரட் லீ 4-0-28-0, யூசுப் 4-0-23-2, அப்துல்லா 3-0-12-1, காலிஸ் 2-0-18-0, சாகிப் 4-0-16-2, பாட்டியா 2-0-11-0, பாலாஜி 1-0-7-2.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
காம்பிர்-அவுட் இல்லை- 54(46)
கோஸ்வாமி(கே)உத்தப்பா(ப)தாமஸ் 6(3)
திவாரி(ப)புவனேஸ்வர் 24(24)
யூசுப்(கே)கங்குலி(ப)பார்னல் 29(25)
பாட்டியா-அவுட் இல்லை- 1(3)
உதிரிகள் 5
மொத்தம்(16.4 ஓவரில் 3 விக்.,) 119
விக்கெட் வீழ்ச்சி: 1-7(கோஸ்வாமி), 2-53(திவாரி), 3-117(யூசுப்).
பந்துவீச்சு: தாமஸ் 3-0-29-1, பார்னல் 4-0-27-1, சர்மா 4-0-29-0, புவனேஸ்வர் 3-0-19-1, யுவராஜ் 2-0-12-0, ராணா 0.4-0-2-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts