மும்பை, மே 4: மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் புணேவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது மும்பை. அதேசமயம் புணே வாரியர்ஸ் 7-வது தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து மீள முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் புணேயின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய புணே வாரியர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
மும்பை அணியில் பிளிஸ்ஸôர்டு 6, சச்சின் 24 ரன்களில் வெளியேறினர். இதனால் மும்பை 11 ஓவர்களில் 69 ரன்களே எடுத்திருந்தது. இதன்பிறகு களம் கண்ட சுமன் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்களும், பொல்லார்டு 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சேர்க்கவே மும்பை 160 ரன்கள் குவித்தது. புணே வீரர் தாமஸ் 4 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கினார்.
அதிர்ச்சித் தொடக்கம்: பின்னர் பேட் செய்த புணே அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரைடர் ரன் எடுக்காமலேயே ஹர்பஜன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்மித் 6, ஜுன்ஜுன்வாலா 10 ரன்கள் என வெளியேறினாலும், மணீஷ் பாண்டே வெளுத்து வாங்கினார். யுவராஜ் தன் பங்குக்கு 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் பாண்டேவும், உத்தப்பாவும் போராடினர். பாண்டே 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களே எடுக்க முடிந்தது. உத்தப்பா 26 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 4 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய புணே வீரர் ராகுல் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்
மும்பை - 160/7 (சுமன் 36, ராகுல் சர்மா 2வி/7)
புணே-139/7 (பாண்டே 59, மலிங்கா 3வி/25)

0 comments :
Post a Comment