background img

புதிய வரவு

தேனிலவுப் பயணத்தைத் தொடங்கியது வில்லியம், கேட் ஜோடி

லண்டன்: இளவரசர் வில்லியமும், அவரது காதல் மனைவி கேட் மிடில்டனும் தேனிலவுக்கு கிளம்பிவிட்டதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளவரசர் வில்லியம், தனது நீண்ட நாள் காதலியான கேட்டை கடந்த மாதம் 29-ம் தேதி மணந்தார். வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. அந்த சனி, ஞாயிற்றுக்கிழமை இளம் தம்பதிகள் அரண்மனையிலேயே தங்கியிருந்தனர்.

அதன் பிறகு வில்லியம் தனது பைலட் வேலைக்குத் திரும்பிவிட்டார். தற்போது பணியில் இருந்து திரும்பியவுடன் இருவரும் தேன் நிலவுக்கு புறப்பட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் எங்கு சென்றுள்ளனர் என்று தெரியவில்லை. இடத்தை சொன்னால் அங்கும் போய் யாராவது தொந்தரவு செய்யக்கூடும் என்பதால் தெரிவிக்கவில்லை.

இளவரசர் வில்லியம் 2 வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்துள்ளார். ஆனால் எத்தனை நாட்கள் தேன் நிலவில் செலவிடுவார்கள் என்று தெரியவில்லை.

இதற்கிடையே ராஜ தம்பதிகள் சேஷெல்ஸ் தீவுகளில் தேன் நிலவைக் கொண்டாடுவதாக இன்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேனிலவை, சந்தோஷமா கொண்டாட விடுங்கள் 'பாப்பராஸி'க்களே!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts