background img

புதிய வரவு

தி ஸ்பிரிட் ஆப் மியூசிக்... புத்தக வடிவில் ரஹ்மான் வாழ்க்கை வரலாறு!

ஆஸ்கர், கிராமி விருதுகள் என இந்திய சினிமா இசைக்கு எட்டாக்கனியாக இருந்த விருதுகளைக் குவித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் நாளை, ஏப்ரல் 6-ம் தேதி மும்பையில் வெளியாகிறது.

தமிழ்ப் படங்களில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தாலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வெடுத்து வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த ஓய்வுக்குப் பிறகு அவர் இசைமைக்க ஒப்புக் கொண்ட ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ராணா' மட்டுமே.

இந்நிலையில் ரஹ்மானின் சொந்த வாழ்க்கை, இசைப் பயணம், அவரது ஆன்மிக ஈடுபாடு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்று தயாராகியுள்ளது. தலைப்பு: 'ஸ்பிரிட் ஆப் மியூசிக்'. இதை எழுதியிருப்பவர் நஸ்ரீன் முன்னி கபீர்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts