background img

புதிய வரவு

பதவியேற்பு விழா : விஜயகாந்த் பங்கேற்பு

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. எதிர்பாராத விதமாக இத்தேர்தலில் ஆட்சியில் இருந்த தி.மு.க., 23 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதனால், சட்டசபை எதிர்க்கட்சியாகும் அந்தஸ்தை அக்கட்சி இழந்துள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றியை அவர் பெற்றிருக்கிறார். இந்த வெற்றியால் விஜயகாந்த் குடும்பத்தினர், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே விஜயகாந்திற்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நேரிலும், மொபைல் போன் வழியாகவும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜயகாந்த் இருக்கும் பக்கத்தை கூட திரும்பி பார்க்காத திரையுலகை சேர்ந்தவர்கள், தற்போது அவரை அதிகளவில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நடிகர் விஜய், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று, விஜயகாந்திற்கு பூங்கொத்து கொடுத்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று நடைபெறும் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கவர்னரை சந்தித்த பின், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., நிருபர்களிடம், விழாவில் பங்கேற்க விஜயகாந்திற்கு அழைப்பு அனுப்பப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts