background img

புதிய வரவு

நடிகை ரம்பா வீட்டுக்குள் 4 காவலாளிகள் ரகளை: பொருட்களை உடைத்து சூறை



நடிகை ரம்யா வீடு சாலி கிராமம் நவநீதம்மாள் தெருவில் உள்ளது. கடந்த வாரம் ரம்பா வெளியூர் புறப்பட்டு சென்றார். வீட்டில் காவலாளி மட்டுமே இருந்தார்.
ரம்பா வீட்டுக்கு அருகில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று முன்தினம் இரவு ரம்பா வீடு அருகில் காரை நிறுத்தி, உள்ளே இருந்தபடியே மது அருந்தியதாக தெரிகிறது.
இதை ரம்பா வீட்டு காவலாளி கண்டித்தார். வேறு எங்காவது சென்று மது அருந்தும்படி கூறினார். இதையடுத்து அவருக்கும், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு கலைந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் அந்த 4 பேரும் நேற்று இரவு மீண்டும் ரம்பா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ரம்பா வீட்டு காவலாளியை தரக்குறைவாக திட்டி தகராறில் ஈடுபட்டனர்.
பிறகு அவர்கள் ரம்பா வீட்டுக்குள் புகுந்து ரகளை செய்தனர். முன் அறை டியூப்லைட்டை அடித்து சூறையாடினார்கள்.தாங்கள் தயாராக கொண்டு வந்திருந்த ஒரு டியூப்லைட்டை மற்றொரு அறைக்குள் தூக்கி வீசினார்கள். கற்களையும் எறிந்து தாக்கினார்கள். பிறகு தப்பி ஓடிவிட்டனர்.
ரம்பா வீட்டு காவலாளி இதுபற்றி இன்று காலை விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், ரம்பா வீட்டில் ரகளையில் ஈடுபட்ட 4 பேரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிவது தெரிய வந்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts