background img

புதிய வரவு

பிரதமர் சென்னை வருகையில் மாற்றம் இல்லை

பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் திட்டமிட்டபடி, வரும் 3ம் தேதி சென்னை வருகிறார். சென்னையில் நடக்கும் இந்திய விஞ்ஞான காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். சென்னையில் அவருடைய மற்ற நிகழ்ச்சிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்திய விஞ்ஞான காங்கிரசில், கடந்த 50 ஆண்டுகளில் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் அனைத்து பிரதமர்களும் கலந்து கொண்டுள்ளனர். அத்தகைய நிகழ்ச்சியில், அரசியல் கலப்பதை தவிர்க்க வேண்டுமென, அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வு துறை விசாரணை செய்ய இருக்கும் நிலையில், காங்கிரஸ் - தி.மு.க.,வின் அரசியல் உறவுகள் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதாகவும், அந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வருவதை தவிர்க்க வேண்டுமென, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவிடம் வேண்டுகோள் வைத்தனர்.


டில்லியை அடுத்த புராரியில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு மூன்று நாட்களுக்கு முன் நடந்த போது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சென்னைக்கு வராமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் என்று சோனியாவிடம் முறையிட்டனர்.
சோனியாவும் அவர்களுடைய கருத்தை பரிசீலிப்பதாக கூறினார்.


ஆனால், பிரதமர் அலுவலகமோ, பிரதமரின் சென்னை பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என நேற்று தெரிவித்தது."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் வெடித்ததில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க., மீது வைத்திருந்த நம்பிக்கை சற்று குறைந்துள்ளது. தி.மு.க.,வை நம்பி மத்திய அரசு இருக்கும் நிலையில் கூட, ராகுல் போன்ற தலைவர்கள் தி.மு.க.,வை மறைமுகமாக எதிர்த்து வந்துள்ளனர். அ.தி.மு.க., உறவை விரும்பாத சோனியாவும், வருகின்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் உறவு வைத்து கொள்வதை இதுவரை ஆதரித்து வருகிறார்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts