background img

புதிய வரவு

கூட்டணி குறித்து கருத்து அறிய ராகுல் இன்று தமிழகம் வருகை

சென்னை : அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், இன்று தமிழகம் வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து இன்றும், நாளையும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கருத்தாய்வு நடத்துகிறார்.


தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை ராகுல் மேற்கொள்கிறார். இன்று காலை டில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் அல்லது காரில் வானகரம் வருகிறார். அங்குள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட எட்டு லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்கிறார்.தி.மு.க., கூட்டணியில் நீடிக்கலாமா அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கலாமா, காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடலாமா என்பது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்த கருத்துக்களை ராகுல் கேட்கிறார்.வானகரம் நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னை தாஜ் ஓட்டலில் திரைப்பட கலைஞர்களை சந்திக்கிறார். பின், விழுப்புரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார்.


விழுப்புரம் மாவட்டத்தில் வடமாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை மட்டும் சந்திக்கிறார். அதன் பின் மீண்டும் சென்னைக்கு வருகிறார்.சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 12 லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார். இரவில் மதுரையில் தங்குகிறார்.நாளை காலை மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்கிறார். தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டரில் திருநெல்வேலிக்கு வருகிறார். அங்கு தென் மாவட்ட ஆதிதிராவிடர் நிர்வாகிகளை மட்டும் சந்திக்கிறார். பின் அங்கிருந்து திருச்சிக்கு வருகிறார்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts