கனடாவில் வசிக்கும் இந்தியரான தீபா மேத்தா இயக்கும் படங்களெல்லாம் சர்வதேச அளவில் புகழ்பெறும். தற்போது அவர் சல்மான் ருஷ்டியின் மிட் நைட் சில்ட்ரன் நாவலை படமாக்குகிறார்.
இந்தப் படத்தில் சபனா ஆஸ்மி, நந்திதாதாஸ், இர்ஃபான் கான், சீமா பிஸ்வாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரேயாவையும் ஒப்பந்தம் செய்தார் தீபா மேத்தா.
தற்போது அவரது லிஸ்டில் புதிய வரவாக பாய்ஸ் படத்தில் நடித்த சித்தார்த்தும் சேர்ந்திருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
0 comments :
Post a Comment