நிறைய ஆப்பிள் பழச்சாறு குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று யூ.கே வின் தேசிய இதய மற்றும் நுரையீரல் ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்திருக்கிறது
தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நிறைய ஆப்பிள் பழம் உட்கொண்டால் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு இல்லையாம்.
ஆப்பிள் பழத்தை உட்கொள்ளும் முன் அதன் மேல் மெழுகு பூசப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிப்பது மிக அவசியம். பெரும்பாலான ஆப்பிள்கள் பளபளப்பாக இருக்க அதன் மேல் மெழுகு பூசப்பட்டிருக்கும், அவை உடலுக்கு மிக மிக ஆபத்தானவை
அதுபோல ஆப்பிள் பழத்தை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். வெட்டி விட்டு சிறிது நேரம் பொறுத்து சாப்பிட்டால் ஆப்பிள் ஆரோக்கியக் கேடு வரும்.ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது. கொழுப்பை குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.
கலோரிகளில் குறைவானது ஆப்பிள் பழம்.
150 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன
தினம் ஒன்றரை 1 கப் ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் கொழுப்பு, வாயு தொல்லை பெரிதும் குறைக்கப்படும்.மேலும் தினமும் 100 கிராம் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வருவதால் 1,500 மி.லி.கிராம் வைட்டமின் c அளிப்பதற்கு சமமான கான்சர் எதிர்ப்பு சக்தியையும் வைட்டமின் சத்தையும் அளிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் சாஸ் சுலபமாக ஜீரணமாகக் கூடியதால் குழந்தைகளுக்கு இதைச் சிறந்த உணவாக இருக்கிறது.
0 comments :
Post a Comment