கொச்சி : டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஐந்து பேர் பலியாகினர். பலத்த காயமடைந்த ஐந்து பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேர் நிலை, கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் கொச்சி பை-பாஸ் சாலையில் பைப்லைன் பகுதியில், நேற்று அதிகாலை 5 மணிக்கு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர், இன்னோவா காரில் மைசூரு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த காரும், எதிரே படுவேகத்தில் வந்த டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சபீர், அன்வர், ரின்ஷாத், நிசாம் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரில் பயணம் செய்த மேலும் ஐந்து பேர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தை உண்டாக்கிய லாரி டிரைவர் காயமின்றி, தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றன
0 comments :
Post a Comment