background img

புதிய வரவு

சிறப்பாக துப்பு துலக்கி சாதனை படைக்கும் போலீசாருக்கு பொற்கிழி: கருணாநிதி அறிவிப்பு


561 காவல் துறை பணியாளர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்- அமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடந்தது. 

விழாவில் முதல்- அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு பதக்கங்களை வழங்கி பேசுகையில், தமிழக காவல்துறையினர் ஆற்றிவரும் அரும்பணிகளை ஊக்குவித்திடும் நோக்கில், ஆண்டுதோறும் அண்ணா பதக்கம், இந்திய குடியரசு தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் போன்ற பல்வேறு பதக்கங்களை வழங்கி, இந்த அரசு அவர்களைப் பாராட்டி வருகிறது.
 
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் குற்ற வழக்குகளில் திறம்பட புலனாய்வு செய்து சிறப்பாக செயல்படும் போலீசார் 50 பேரை தேர்வு செய்து தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழிகள், பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
 
அந்தப் பொற்கிழிகள் தமிழக அரசின் பதக்கம் என்கிற பெயரால் அவர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts