குடிசைகளை வெள்ள நீர் சூழ்ந்தது: மேல்மலையனூரில் பரபரப்பு
அவலூர்பேட்டை : மேல்லையனூரில் குளத்து தெருவில் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேல்மலையனூரில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் அக்னி குளத்தில் நீர் நிரம்பி உள்ளது. பச்சையம்மாள் மலைக்கு செல்லும் வழியில் தனியார் நபரின் நிலத்தில் குளத்து தண்ணீர் தேங்குகிறது. இதனால் அருகில் நெல் பயிரிட்ட விவசாயி நேற்று முன்தினம் குளத்தெருவழியாக பொக்லைன் மூலம் தண்ணீர் வெளியேறுவதற்கு திடீரென பள்ளம் எடுத்தார். பாதி தூரம் வரை பள்ளம் எடுத்துள்ளதால், இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள கூரை வீடுகளில் புகுந்தது. மேலும் சிறுதலைப்பூண்டி ரோட்டின் குறுக்காக சென்ற தண்ணீர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குட்டையாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் ஒன்று கூடி மண்ணை கொட்டி தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தினர். இந்த தெருவில் முழுமையாக கால்வாய் அமைக்கவும், சித்தேரிக்கு செல்லும் கால்வாயை தூர் வாரவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
0 comments :
Post a Comment