தெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து வரலாற்று சாதனை ஏற்படுத்தினார். அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சேர்த்து 100 சதத்தை எட்டும் நிலையில் இருக்கிறார்.
அவருடைய அபார சாதனைக்கு மேலும் பெருமை அளிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வற்புறுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகிகள் லதாமங்கேஸ்கர், ஆஷா பான்ஸ்லே ஆகியோரும் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இப்போது பிரபல “செஸ்” வீரர் ஆனந்தும் இதே கருத்தை கூறியுள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-
தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே அவர்ருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். ஒரு வீரர் மட்டும் சிறப்பாக ஆடினால் போதாது 3 அல்லது 4 வீரர்கள் சிறப்பாக ஆடி விட்டால் உலக கோப்பையை வென்று விடலாம். தெண்டுல்கர் எப்போதுமே சிறப்பாக ஆடிவருகிறார்.
இவ்வாறு ஆனந்த் கூறினார்.
0 comments :
Post a Comment